இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள 2,535 முறைப்பாடுகளில் பெரும்பான்மையானவை அரசாங்க ஊழியர்களுக்கு எதிரானவையாக உள்ளன எனவும் இது அரசாங்க சேவையில் ஊழல் கணிசமாக அதிகரிப்பதை காட்டுகின்றது எனவும் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கூறியுள்ளது.
இந்த ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளில் 130 முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு அதில் 69 முறைப்பாடுகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, உயர்நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்குகளில் 32 முடிவுக்கு வந்துவிட்டன. இதில் 17 வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டன.
பிரதேச செயலகங்கள், பொலிஸ் மற்றும் பாடசாலை நிர்வாகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துச் செல்வதாக ஆணைக்குழு தெரிவித்தது.
இந்த ஆணைக்குழு, பெற்றோலிய கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ரி.ஜயவர்தனவுக்கு எதிராக தரக்குறைவான எண்ணெய் இறக்குமதி செய்தார் என்று குற்றஞ்சாட்டி வழக்கு தாக்கல் செய்துள்ளது. (சுபுன் டயஸ்)

Aucun commentaire:
Enregistrer un commentaire