13வது அரசியல் அமைப்புத் திருத்தம் இரத்துச் செய்யப்படுதென்பது, நாட்டில் மீண்டும் மோதல்கள் ஏற்பட மூல ஆரம்பமாக அமையும் என ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான உ தெரிவித்துள்ளார். 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் இரத்துச் செய்யப்படுவதை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் இந்த அரசியல் அமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்தி, மாகாண சபைகளுக்கு அதிகளவிலான அதிகாரங்களை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் உட்பட நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள் 13வது அரசியல் அமைப்புத்திருத்தம் தொடர்பாக கடும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதன் மூலம் அந்த மக்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து செல்வது முக்கியமானது. இந்த அரசியல் அமைப்புத் திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டும் என கூறுபவர்கள் அரசாங்கத்த்தில் அங்கம் வகிக்கும் ஒரு சிலரே அன்றி அரசாங்கம் அல்ல எனவும் சந்திரகாந்தன் கூறியுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire