jeudi 18 octobre 2012

2006ஆம் ஆண்டு 5 மாணவர்கள் சுட்டுப் படுகொலை வழக்கு;

படுகொலை வழக்கு; நீதிமன்ற நடவடிக்கை குறித்து ஆராய்வு
news
திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு  5 மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக சுருக்க முறையற்ற நீதிமன்ற நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான சாத்தியம் பற்றி சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
 
மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற நிறுவனங்களின் தொடர்ச்சியான அழுத்தத்தைத் தொடர்ந்து இந்த முடிவுக்கு சட்டமா அதிபர் திணைக்கழம் வந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
 
ஏற்கனவே ஐ.நா.மனித உரிமைகள் சபையின் அமர்வுகள் ஜெனீவாவில் நடைபெற்ற சமயத்தில் இந்த வழக்கை மீண்டும் எடுத்து விசாரணைகளை தொடரப்போவதாக இலங்கை அரசு உறுதியளித்திருந்தது. 
 
இது ஒரு நீண்ட செயன்முறை. நாம் இப்போது குற்றப்புலனாய்வு விசாரணை அறிக்கைகளை ஆராய்ந்து வருகின்றோம்.இதன்படி விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணியுள்ளோம் என குறித்த வழக்குவிசாரணை குறித்து சட்டமா அதிபர் கூறினார். 
 
இந்த ஐந்து மாணவர்களும் திருகோணமலையிலுள்ள காந்தி சிலை முன் கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Aucun commentaire:

Enregistrer un commentaire