lundi 29 octobre 2012

எதிர்பேன்:13ஆவது திருத்தத்தை ரத்து செய்தால் .சரத் ஏக்கநாயக்க


'நாட்டின் இறைமை, ஒருமைப்பாட்டின் பிரகாரம் அரசியலமைப்புக்கு அமைவாக நான் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டேன். எனினும், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை ரத்து செய்தால் நான் எதிர்ப்பேன்' என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார். 

13ஆவது திருத்தத்தின் நகல் உண்மையிலேயே மாகாணசபைகளில் அமுல்படுத்தப்படவில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த திருத்தம் மாகாணசபைகளுக்கு கொண்டுவரப்பட்டது.

வட, கிழக்கில் இந்த முறைமை உண்மையாக நடைமுறையில் இல்லை. தற்பொழுது கிழக்கு மாகாணசபை நிறுவப்பட்டுள்ளது. எனினும் அங்கும் 13ஆவது திருத்தம் முறையாக அமுல்படுத்துவதில்லை.

இது அரசாங்கத்தினதோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதோ கருத்து அல்ல. இது எனது தனிப்பட்ட கருத்தாகும். 13ஆவது திருத்தத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுத்தால் நான் அதை எதிர்ப்பேன் என்று அவர் மேலும் கூறினார். 

Aucun commentaire:

Enregistrer un commentaire