jeudi 18 octobre 2012

இந்தியா 8 அடி பாஞ்சா நான் 16 அடி பாய்வேன் என்கிறது இலங்கை


இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் இயக்கத்தின் தடை நீக்கப்படலாம் என சில செய்திகள் வெளியாகியிருந்தது. இதனை அடுத்து தடாலடியாக இலங்கை அரசு தானும் ஒரு அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இவ்வறிவித்தலானது இந்தியாவை மேலும் ஆத்திரமூட்டும் செயலாக அமைந்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்படும் சந்தேக நபர்களில் ஒருவராக கே.பி உள்ளார். இவரை தமது நாட்டிற்கு நாடு கடத்த வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்து வந்துள்ளது. இலங்கை அரசானது கே.பியோடு பேச்சுவார்த்தை நடத்தி அவரை மலேசியாவில் கைதுசெய்தது போல ஒரு நாடகத்தை அரங்கேற்றியது.

இருப்பினும் அவரை இந்தியாவுக்கு நாடுகடத்தவேண்டும், என்று இந்தியா கோரிக்கை விடுத்தது. இதனை இலங்கை அரசு நிராகரித்துவிட்டது. தற்போது இலங்கை அரசு சீனாவுடன் தனது உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் , இலங்கை அரசை அச்சுறுத்த சில செய்திகள் அவ்வப்போது இந்தியாவில் இருந்து வெளிவருவது சகஜம். அதுபோலவே இந்தியா விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவுள்ளது என்ற செய்தியும் வெளியாகியிருந்தது. ஆனால் இச் செய்தி வெளியாகிய சில மணி நேரங்களில், கே.பி மீது எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லை, அவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபடலாம் என்று இலங்கை செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire