இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 15ஆம் விடுதியில் செயற்பட்டும் வலது குறைந்தோருக்கான சிகிச்சை நிலையத்தை பார்வையிட்டார். இந்த நிலையத்தில் வலது குறைந்தோரில் கால்களை இழந்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் செயற்கை கால்கள்; பொருத்தும் நடவடிக்கையினை அமெரிக்க தூதுவா பார்வையிட்டார்.
இதன் பின்னர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தனுடன் கலந்துரையாடினார்.
இதையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விடுதிகள் சிலவற்றையும் தூதுவர் பார்வையிட்டார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயதம் செய்த புதிய அமெரிக்க தூதுவர் ஒல்லாந்தர் கோட்டையையும் பார்வையிட்டார். மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை புதன்கிழமை ஆகிய தினங்களில் தங்கியுள்ள அமெரிக்க தூதுவர், பிரதிநிதிகள் பலரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

Aucun commentaire:
Enregistrer un commentaire