lundi 15 octobre 2012

ஜனாதிபதி பதவியில் நீடிக்க ....நீதியரசர் சரத் என் சில்வா


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருப்பதற்கு உதவிகளை வழங்கியதாக ஏற்றுக்கொண்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, இருந்த போதிலும் ஜனாதிபதியைப் பதவி கவிழ்ப்பதற்கு தான் இப்போது பொதுமக்களின் உதவியைக் கோரி அறைகூவல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஆட்சியில் நீடிப்பதற்கு தாம் உதவிகளை வழங்கியதாக சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.  இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாகவும் நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட தொடர்பான வழக்கில் தாம் ஜனாதிபதிக்கு சார்பாக தீர்ப்பளித்தமையினால், ஜனாதிபதி பதவியில் நீடிக்க முடிந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே ஜனாதிபதியை பதவி கவிழ்க்க பொதுமக்களிடம் தற்போது உதவி கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  இதேவேளை, தமக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சில குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பகிரங்க விவாதம் நடத்தத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire