lundi 15 octobre 2012

எதிர்கட்சி ஒன்றை உருவாக்க முயற்சி: பொன்சேகா அறிவிப்பு!!



ஐக்கிய தேசிய கட்சி பலமாக இல்லாத நிலையிலேயே பொது எதிர்கட்சி ஒன்றை உருவாக்க முயற்சிப்பதாக முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பாணந்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்  கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமாக இருந்தால் அதற்கு முதலில் பலமான எதிர்கட்சி ஒன்று தேவை.

நாட்டில் அவ்வாறானதோர் பலமான எதிர்கட்சி தற்போது இல்லை. ஐக்கிய தேசிய கட்சி மிகவும் பலவீனமாக காணப்படுகிறது. இதன் காரணமாகவே தாம் பொது எதிர்கட்சியை உருவாக்க போவதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire