தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல சிறுவர் போராளிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த சகல சிறுவர் போராளிகளும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 67வது பொதுச் சபைக் கூட்ட மூன்றாம் குழு அமர்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை மனித உரிமை விசேட பிரதிநிதி, அமைச்சர் மஹிந்த சமரசிங்க இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி 594 சிறுவர் போராளிகளை இலங்கை விடுவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
12000 முன்னாள் போராளிகளில் 10985 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளதாகவும் புனர்வாழ்வு முகாமில் எந்தவொரு சிறுவர் போராளியும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர் போராளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற கோட்பாட்டை இலங்கை அரசாங்கம் பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், 212 முன்னாள் போராளிகள் பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire