அமெரிக்காவில் பல்வேறு மாநிலங்களில் நீர்வழி செடிகளினால் ஏற்படும் தொற்று கிருமியினால் ஆண்டுக்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி வருவதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையில் 219 பேர் இறந்து விட்டார்கள். மேலும் 4,725 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள். இதுகடந்த 2002-ம் ஆண்டிற்கு பிறகுஏற்பட்ட அதிக பாதிப்பு ஆகும். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த நோய் தாக்குதல் டெக்சாஸ், கலிபோர்னியா, லூசியானா, இல்லியான்ஸ், மிஷிகான் உள்பட 8 மாநிலங்களில் நிலவுகிறது.
அதிகபட்சமாக டெக்சாசில் 1,683 பேருக்கு பாதிப்பு நிகழ்ந்து 77 பேர் உயிர் இழந்தனர். அங்குள்ள டால்ஸ் போர்ட் பகுதியில் மட்டும் 36 பேர் செத்தனர் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் கொசுக்கடி நோயினால் இந்த ஆண்டில் 36 பேர் உயிர் இழந்துள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire