கரீபியன் கடல் பகுதியில் நிலைகொண்டி ருந்த ‘சாண்டி’ சூறாவளி அமெரிக் காவின் புளோரிடா மற்றும் மேரிலாண்ட் மாகாணங்களைத் தாக்கியதில் 6 கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பதுடன், 60 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இம்மாகாணங்களில் வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப் பட்டிருப்பதுடன், மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருப்பதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சூறாவளித் தாக்கத்தைத் தொடர்ந்து, நவம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெற விருக்கும் அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பராக் ஒபாமா மற்றும் மிட்ரோம்னி ஆகியோர் இம் மாநிலங்களில் நடத்தவிருந்த தேர்தல் பிரசாரப் பணிகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. சாண்டி சூறாவளித் தாக்கத்தால் அமெ ரிக்காவின் 12 மாநிலங்களில் கனமழை பெய்துவருகின்றது. இந்த மாகாணங்களில் தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 61 ஆயிரம் பேர் தயார் நிலையில் வைக் கப்பட்டிருப்பதாக அமெரிக்கச் செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் சூறா வளித் தாக்குதலுக் குள்ளான பகுதிகளில் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடும்மழை தொடர்வதால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire