மன்னார் மாவட்டத்தில் மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள திருக்கேதீஸ்வரம் மற்றும் எள்ளுப்பிட்டி முதலிய கிராமங்களில் இந்திய வீட்டுத்திட்டத்தில் மோசடிகள் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பிரதேச செயலக அதிகாரிகளும் கிராம அலுவர்களுமே இவ்வாறு வீட்டுத் திட்டத்தில் மோசடி ஈடுபடுவதாக மக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வருமானமற்ற வறிய குடும்பங்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தில் புறக்கணிப்பு நிகழ்வதாகவும் வீட்டுத் திட்டத்திற்காக காலம் காலமாக வாழ்ந்த மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு தமக்கு வேண்டியவர்களுக்கு அவற்றை வழங்கி வீட்டுத் திட்டத்தையும் வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் பிரதேசத்திலிருந்து பலர் இந்திய தூதரகத்திற்கு தன்னிப்பட்ட ரீதியில் கடிதங்களை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை இந்த விடயங்கள் தொடர்பில் பிரதேச கிராம அதிகாரிகளுக்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் கடிதங்கள் அனுப்பிய பொழுதும் பதில்கள் ஏதுவும் வராத நிலையில் அந்த மக்கள் ஏமாற்றத்துடன் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Aucun commentaire:
Enregistrer un commentaire