vendredi 26 octobre 2012

வைகோ பொய்சொல்றார்.பிரபாகரன் உடலை நான் கண்ணால் கண்டேன். தயா மாஸ்ரர்


பிரபாகரன் உயிருடன் இருப்பதாக, மறுமலர்ச்சி திராவிட முன்னனேற்ற கழக தலைவர் வைகோ. போலி பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், தமிழ் நாடு அரசியல் வாதிகள், தங்களது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக, இலங்கை தமிழர்களின் உரிமைகள் பற்றி பேசுவதாகவும், எல்ரிரிஈ முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்டர், த ஹிந்து பத்திரிகையுடனான செவ்வியின்போது தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், இலங்கை ராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட தயா மாஸ்டர், பிரபாகரன் உயிருடன் இல்லை. அதில் எதுவித சந்தேகமும் இல்லை. அவரது இறந்த உடலை தான் நேரில் கண்டதாகவும், த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார். 

புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்று தெரிவித்துள்ள தயா மாஸ்டர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதே, தமிழர் பிரச்சினை தீர்வுக்கு ஒரே வழியென, தெரிவித்துள்ளார். 

சமாதானம் மலர்வதற்கு கிடைத்த இரண்டு அருமையான சந்தர்ப்பங்களை பிரபாகரன் தவறவிட்டதாகவும், தயா மாஸ்டர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் திராவிட முன்னேற்றக்கழக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி, அவர்களது குறுகிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே, இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதாகவும், இதுவிடயத்தில் இதய சுத்தியுடனோ அல்லது நேரடியாகவோ கருத்துகளை தெரிவிப்பதில்லையெனவும், தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில், விவசாயம், நிர்மாணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அபிவிருத்திகள் இடம்பெற்று வருவதாகவும், அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

Aucun commentaire:

Enregistrer un commentaire