samedi 20 octobre 2012

வட ஆப்கானிஸ்தான் பகுதியில் குண்டுவெடிப்பில் 18 பேர் பலி


சனிக்கிழமை, 20 ஒக்டோபர் 2012 

வட ஆப்கானிஸ்தான் பகுதியில் திருமணமொன்றில் கலந்துகொள்ளச் சென்ற பெண்களும் சிறுவர்களும் வீதியோர குண்டுவெடிப்பில் அகப்பட்டு பலியாகியுள்ளனர். இக்குண்டு வெடிப்பில் பெரும்பாலான பெண்கள், குழந்தைகள் உட்பட 18 பேர் பலியாகியுள்ளதாகவும் 15இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பல்ஹ் மாகாணத்தின் டவ்லடாபாத்தில் மினிபஸ் ஒன்றில் இன்று காலை திருமண வைபவமொன்றிற்காக பயணித்தவர்களே வீதியோர குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

இத்தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமிட் கர்ஸாய் தெரிவித்துள்ளார். அப்பாவி பொதுமக்களை இலக்குவைத்து அவர்கள் பாவிக்கின்ற வீதிகளில் இவ்வாறான குண்டுத்தாக்குதல் மேற்கொள்வது மிலேச்சத்தனமானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire