பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் பாலியல் தொழிலாளர்கள் தொந்தரவு செய்யப்படும் நாடுகளுள் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் அடங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளர்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி கூட்டம், ஐ.நா சனத்தொகை நிதியம் ஆகியவை வேறு சில நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ள 210 பக்கங்களை கொண்ட அறிக்கையில் பங்களாதேஷ், கம்போடியா, சீனா, பீஜிங்க, இந்தியா, கிரிபெட்டி, மியன்மார், நேபாளம், பப்புவா நியூகினியா தீவுகள் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் பாலியல் தொழிலாளர்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்தால் துன்புறுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.
அநேகமாக ஆசிய நாடுகளில் விபச்சாரத்தை சட்டமாக்குதல் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள வழிவகைகள், பாலியல் தொழிலாளர்களை தலைமறைவாக தொழில் செய்ய வைப்பதால் எய்ட்ஸ் மற்றும் வேறு பால்வினை நோய்கள் தொற்றும் அபாயத்துக்குள் அவர்களை தள்ளிவிடுகின்றது என இந்த அறிக்கை கூறுகிறது.
ஆணுறைகளை கைப்பற்றி பொலிஸார் அதனை ஆதாரங்களாக பயன்படுத்துவதும் பெரும் பிரச்சினையாக உள்ளது. இலங்கையில் அநேகமாக பாலியல் தொழிலாளர்கள் வீதிகள், சேரி வீடுகளை மையமாகக் கொண்டு தொழில் செய்கின்றனர்.
இதைவிட, களவாக இயங்கும் விபச்சார விடுதிகளும் உள்ளன. பல பாலியல் தொழிலாளர்கள் நடன கிளப்புகளில் வேலை செய்துகொண்டு விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
பாலியல் தொழிலாளர்களை புனர்வாழ்வு என்ற பெயரில் தடுத்துவைத்தல் என்னும் மிக மோசமான அணுகுமுறை சீனா, இந்தியா, இலங்கை, மியன்மார் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.
Aucun commentaire:
Enregistrer un commentaire