20 அக்டோபர் 2012
புலம்பெயர் தமிழ் மக்களுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்படுகிறது. மிக நீண்ட காலமாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம், புலம் பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். திட்டமிட்டவாறுஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டால் வெகு விரைவில் கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிக நீண்ட காலமாக நிலவி வரும் நம்பிக்கையின்மையை களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புக்கள் உருவாவதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் இன்னும் ஒரு தசாப்த காலத்தில் மீண்டும் யுத்தம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire