வடமாகாணத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் அரசுக்குள் பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக மிகவும் நம்பகரமாக அறியமுடிகின்றது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆலோசகர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பியை வடமாகாணத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவேண்டுமென அரசின் முக்கியமான சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேசமயம், ஈ.பி.டி.பி. தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை முதலமைச்சர் வேட்பாளராக ஆளுங்கட்சி நியமிக்க வேண்டுமென மற்றுமொரு சாரார் வலியுறுத்திவருகின்றனர்.
இந்த இருவரும் மாகாணசபைத் தேர்தலைக் குறிவைத்து காய்களை நகர்த்திவருவதால் ஆளுங்கட்சிக்குள் இது விடயத்தில் கடும் பனிப்போர் உருவாகியுள்ளது.
தேர்தல் களத்தில் இறங்கும் முதற்கட்ட வேலையாகவே கடந்த வாரம் முதல் கே.பி. மக்களுடன் நெருங்கும் நடவடிக்கைகளில் இறங்கிவருவதாக உயர்மட்ட அரச வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
கே.பி. எதுவித குற்றமற்றவரென அரசின் முக்கிய பிரமுகர்கள் தெரிவிக்க ஆரம்பித்துள்ளமையும் இதன் பின்னணியில்தான் என்று அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.
Aucun commentaire:
Enregistrer un commentaire