சர்வதேச புலம்பெயர் விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் ஒருவர், பயங்கரவாத விசாரணை பிரிவினரால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என அரசாங்க புலனாய்வுப் பிரிவை கோடிட்டு கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் 1997 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்துள்ளதுடன், 2000 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றுள்ளார் என கண்டுபிடித்துள்ள அரச புலனாய்வுத் துறை அவர்குறித்து பல கதைகளை தெரிவித்துள்ளது
இங்கிலாந்தில் 12 வருடங்கள் வசித்து வந்த இவர், விடுதலைப்புலுpகளின் வளர்ச்சிக்கு தேவையான பணத்தை சேகரித்து வழங்கியுள்ளார். இந்த தகவல்கள் தெரியவந்ததை அடுத்து, இந்த சந்தேக நபரை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
இந்த நிலையில், மேற்படி சந்தேக நபர், 12 வருடங்களுக்கு பின்னர், இலங்கை சென்று, மீண்டும் வெளிநாடு செல்ல முயற்சித்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபர் சுமார் ஒரு கிலோ கிராம் தங்க ஆபரணங்களை அணிந்திருந்தாகவும் அவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா எனவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Aucun commentaire:
Enregistrer un commentaire