lundi 15 octobre 2012

ஆயுதக்கிடங்கு கண்டுபிடிப்பு மட்டக்களப்பில்


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் ஆயுதக்கிடங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
சத்துருக்கொண்டான் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த ஆயுதக்கிடங்கு இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இதனைக்கண்டு சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இது மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆயுதக்கிடங்கில் உள்ள  வெடிபொருட்களை செயழிலக்கச் செய்யும் செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் தங்களது செயற்பாடுகளுக்காக இந்த வெடிபொருட்களை இங்கு மறைத்து வைத்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire