mercredi 31 octobre 2012

நாடு கடந்த அரசு தொடர்பாக செய்தி

கடந்த 3 தினங்களுக்கு முன்னர், ஆங்கில ஊடகமான ஸ்ரீலங்கா காடியன் பத்திரிகை நாடு கடந்த அரசு தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதாவது கே.பி ஊடாக மகிந்தர் முன்னெடுக்கும் புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தையில் நாடு கடந்த அரசின் உறுப்பினர் சிலரும் கலந்துகொள்கின்றனர் என்பது தான் அச்செய்தியாகும். இது எவ்வாறு ஸ்ரீலங்கா காடியன் ஊடகத்துக்கு தெரியும் என்று கேட்டால், கே.பியின் நண்பர்களில் ஒருவர், தனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றை காடியன் ஊடகத்துக்கு அனுப்பியதால். இதனை ஆதாரமாக வைத்தே அவர்கள் இச் செய்தியை வெளியிட்டார்கள். அதிர்வு இணையமானது இச் செய்தியை மொழிபெயர்த்து வெளியிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து, மேன்மை தங்கிய பிரதமர் திரு ருத்திரகுமாரன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் இச் செய்தியை, முதலில் வெளியிட்ட ஸ்ரீலங்கா காடியன் ஊடகத்துக்கு தனது கண்டனங்களை வெளியிடாது, இச்செய்தியை தமிழாக்கம் செய்த இணையங்களை தாக்கியுள்ளார். அதாவது அவர் சொல்வது என்னவென்றால் இப்படி ஒரு நிகழ்வு நடந்தால், தம்மிடம் கேட்க்காமல் எப்படி போடுவீர்கள் என்பது தான் ! சரி தான் ஒத்துக்கொள்கிறோம் ! ஜனநாயக வழிமுறையில் உங்களிடம் இப்படி நடக்கிறதா என்று கேட்டுத் தான் போடுவது நல்லது. இல்லையேல் உங்கள் கருத்தையும் இணைத்து போடுவது நல்லது...... ஆனால் ...... ஆனால் ....... சுவாமி நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்றே தெரியவில்லையே ? அங்கே தானே குழப்பமே ஆரம்பமாகிறது. ஒரு மனிதரை தொலைபேசியில் தொடர்புகொள்லலாம், மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம், இல்லையேல் நவீனகாலமாச்சே ஸ்கைப்பில் தொடர்புகொள்ளலாம், ஆனால் சுவாமி உங்களை எப்படித் தொடர்புகொள்வது ?



தொலைபேசியில் அழைத்தால் கறுப்பு, ஒலிப்பதிவு பண்ணிவிடும் என்று சொல்லுறீங்களே ! சிலருக்கு கறுப்பு என்றால் என்ன என்று தெரியாது இல்ல ? கறுப்பு என்பது ஒரு மின்னஞ்சல் பத்திரிகை. அது எப்ப வரும் எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அப்பப்ப வரும் ! அதில் அதிகமாகத் தாக்கப்படும் நபர் யார் என்று கேட்டால் திரு.ருத்திரகுமார் அவர்கள் தான். சரி எழுதுவார்கள் என்று மட்டும் பார்த்தால் பின்னர் தொலைபேசி உரையாடலை ரக்கோட் பண்ணி(ஒலிப்பதிவுசெய்து) வெட்டி ஒட்டி, தமக்கு ஏற்றவாறு பின்னர் வெளியிடுவார்கள். கறுப்பு பேப்பர் வந்தால், கூடவே ஒரு ஒலி நாடாவும் சேர்ந்துவரும்.(ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பதுபோல ஓகே !) இதில் பல முறை திரு.ருத்திரகுமார் அவர்கள், சிலருடன் பேசிய உரையாடல்கள் வெளியாகியது. இது பலருக்குத் தெரியாது. கறுப்பு பேப்பர் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்தா-தான் அது தெரிந்திருக்க வாய்ப்புண்டு !

இப்படியான நிலையில், யாராவது போன் அடித்தால், நான் உங்களோடு பேசமாட்டேன். நீங்கள் அதனை ரக்கோட் பண்ணி கறுப்பிடம் கொடுப்பீர்கள் என்று பிரதமர் ருத்திரா அவர்கள் எமக்கே சொல்லியுள்ளார். அதாவது கறுப்பு பேப்பரில் அவருக்கு அப்படி ஒரு பயம் இருக்கு என்றால் பாருங்களேன். இப்படி மறைந்திருந்து மட்டும் பார்த்தால் போதுமா ? சுவாமி ! 

அப்ப ஏதாவது டவுட் கேட்ப்பது என்றால், நாம் யாரிடம் போய் கேட்ப்பது ? இல்லை ஒரு செய்தி வந்திருக்கிறதே இதில் உண்மை உண்டா ? என்று கேட்க்கக் கூட வழியில்லாத நிலை இருக்கும்போது, திரு.ருத்திரா அவர்கள் தன்னிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு செய்தியைப் போடலாமே என்று ஊடக அறிக்கையில் எவ்வாறு குறிப்பிட முடியும் என்கிறேன் சுவாமி ? 

திரு.ருத்திரகுமார் அவர்கள், ஸ்ரீலங்கா அரசின் சதி என்கிறார். ஆனால் நாடுகடந்த அரசின் முக்கியஸ்தரான திரு.சர்வே அவர்கள் தனது அறிக்கையில், இது ஸ்ரீலங்கா அரசின் சதி என்று ஒருபொழுதும் குறிப்பிடவில்லை. எனவே அவர் இப்படி ஒரு மின்னஞ்சல் இருக்கலாம் என்று மறைமுகமாக ஒத்துக்கொள்கிறார். ஆதலால் திரு.ருத்திரகுமாரன் அவர்கள் நிச்சயம் இதுகுறித்து உள்விசாரணை செய்யவேண்டிய மிகவும் அவசியம் என்பது மக்களின் கருத்தாக அமைந்துள்ளது. 

Aucun commentaire:

Enregistrer un commentaire