jeudi 18 octobre 2012

அணு உலைகளின் கண்காணிக்க கோபுரங்கள் : இலங்கை அறிவிப்பு !


கொழும்பு: தமிழகத்தின் கல்பாக்கம், கூடங்குளம் அணு உலைகளில் இருந்து ஏற்படும் அணுக் கசிவை கண்டுபிடிக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும் என்று இலங்கை மின்சாரத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

இலங்கையில் அணு தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதற்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளும் இந்த விஷயத்தில் உதவ முன்வந்துள்ளன. எந்த நாட்டிட மிருந்தும் அணு தொழில்நுட்ப உதவியை பெற நாங்கள் தயாராக இருக்கிறோம். விவசாயம், கைத்தொழில், தொழில் நுட்பம் ஆகிய துறைகளுக்கும் அணு தொழில்நுட்பத்தை விரிவாக்கத் திட்ட மிட்டுள்ளோம். இதற்காகஅணுசக்தி அதிகார சபையின் சட்டத்தை திருத்த முடிவு செய்ய உள்ளோம்.

இந்தியாவிலுள்ள அணு உலைகளில் இருந்து ஏதும் கசிவு ஏற்பட்டால் அது குறித்து முன்கூட்டி அறிய முன்னெச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகிறோம். சர்வதேச அணு சக்தி ஒப்பந்தத்தின்படி இந்தியா இலங்கைக்கு உதவ வேண்டும். இது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது, இந்தியா உதவினாலும் இல்லாவிட்டாலும் எமது மக்களை பாதுகாக்க நாங்கள் நட வடிக்கை எடுப்போம் என்றார் அவர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire