19 ஒக்ரோபர் 2012 இரண்டாம் உலக போரின் போது இறந்த பிரிட்டிஷ் வான்வீரர்கள் 8 பேரின் உடல்கள் 67ஆண்டுகளுக்கு பிறகு இன்று புதைக்கப்பட்டது.
இரண்டாம் உலக போர் நடந்த காலகட்டத்தில் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலின் போது பிரிட்டிஷ் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த பிரிட்டிஷ் வான்வீரர்கள் எட்டு பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடைபெற்றது. தாக்குதலுக்கு உள்ளான விமானத்தின் பாகங்கள் காக்கோஸ் தீவில் உள்ள காட்டு பகுதியில் விழுந்ததாக கூறப்பட்ட நிலையில், 1991ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன.
ஆனால் வீரர்களின் உடல்கள் கடந்த 2009ஆம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வீரர்களின் உடல்கள் 67ஆண்டுகளுக்கு பின்னர் இன்று இராணுவ மரியாதையுடன் கோலாலம்பூரில் உள்ள காமன்வெல்த் போர் கல்லறையில் புதைக்கப்பட்டன.
Aucun commentaire:
Enregistrer un commentaire