samedi 27 octobre 2012

17 பொதுமக்கள் மற்றும் 15 காவல்துறையினர் ஆப்கானிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதலில் சாவு


காபூல், அக். 26-ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள மயாமனா மசூதியில் இன்று பக்ரீத் பண்டிகையின் முதல் நாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது போலீஸ் உடையில் வந்த தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் 17 பொதுமக்கள் மற்றும் 15 காவல்துறையினர்   கொல்லப்பட்டனர்.

காவல்துறை தலைவர் அப்துல் காலிக் அக்சாய் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. என்றாலும், ஹமீது கர்சாய் தலைமையிலான அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தலிபான்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வடக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆதிக்கம் முறியடிக்கப்பட்டு தற்போது அங்கு அமைதியாக இருந்தது. இந்நிலையில் அங்கு மீண்டும் தலிபான்கள் கைவரிசை காட்டியிருப்பது ராணுவத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire