இந்திய அரசின் அழுத்தத்தின் பேரில் புதுடெல்லி வரவும் இல்லை, சிறிலங்கா அரசின் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கெடுக்குமாறு இந்தியா எமக்கு அழுத்தம் கொடுக்கவும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்கா அரசு எம்முடன் பேசி சில இணக்கப்பாடுகளை எட்டிய பின்னர், தெரிவுக்குழுவுக்கு போகலாம் என்று நாம் கூறினோம். ஆனால் சிறிலங்கா அரசு அதற்கு உடன்படவில்லை. தெரிவுக்குழுவின் மீது எமக்கு நம்பிக்கையில்லை. அதன்மூலம் எதுவும் கிடைக்கப் போவதில்லை. தமிழர்களுக்கு சுயாட்சி வழங்குவது குறித்து சிறிலங்கா அரசு அக்கறை கொள்ளவில்லை என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. சிறிலங்கா அரசு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு மறுக்கிறது. மாகாண அரசுகளிடம் உள்ள நிதி அதிகாரங்களை மீளப்பெற்று வருகிறது. சிறிலங்கா அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டு விட்டதாக நாங்கள் உணர்கிறோம். அவர்கள் சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று. பல இனங்கள் வாழும் கிழக்கு மாகாணத்தின் இனப்பரம்பலை மாற்றியமைப்பதற்காக, பல சிங்களக் கிராமங்கள் கிழக்குடன் இணைக்கப்பட்டுள்ளன. சில தமிழ்க் கிராமங்கள் கிழக்கு மாகாணத்தில் இருந்து நீக்கப்பட்டு வேறு மாகாணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். |
mercredi 17 octobre 2012
அரசு எம்மை ஏமாற்றி விட்டதாக உணர்கிறோம்” - புதுடெல்லி கூட்டத்தில் சம்பந்தன்காலம் கடந்த ஜானம்
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire