"திவிநெகும' சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி யாழ். நகரில் இன்று முற்பகல் 10 மணிக்கு மணிக்கூட்டு கோபுர முன்றிலில் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் உத்தரவுக்கு ஏற்ப சமுர்த்தி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்.மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களையும் சேர்ந்த சமுர்த்தி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது திவி நெகும சட்டத்தை நிறைவேற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பு தடையாக இருப்பதாகவும்,இதனால் சமுர்தி ஊழியர்களே பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பின்னர் பேரணியாக யாழ். மாவட்டச்செயலகத்துக்குச்சென்று அரச அதிபரிடம், "திவிநெகும' சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிய மனுவும் கையளிக்கப்பட்டது.
Aucun commentaire:
Enregistrer un commentaire