samedi 13 octobre 2012

GTF உடன் இணைந்து செயல்படும் அமைப்புகள் எவை ? இலங்கை துப்பு துலக்க ஆரம்பம் !


இலங்கை இராணுவத்திற்கு எதிராக போர் குற்றங்களை சுமத்தி, குற்றவாளியாக முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரித்தானிய உலகத் தமிழர் பேரவையுடன் இணைந்து ரகசியமான முறையில் செயற்பட்டு வரும் அரசசார்பற்ற நிறுவனங்கள் குறித்து அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.

அடுத்த மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின், மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு கூட்டத் தொடர்பில் சமர்பிப்பதற்காக பொய்யான தகவல்கள் பலவற்றை உலகத் தமிழர் பேரவைக்கு அனுப்பியுள்ளதாக, விடுதலைப்புலிகளுக்கு எதிரான தமிழர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. அதாவது தமிழர்கள் சிலர் தாம் புலிகளை எதிர்ப்பதாக கருதிக்கொண்டு, இலங்கை அரசுக்கு தகவல்களை வழங்கிவருகின்றனர். இவர்களில் சிலர் தற்போது இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் ஊடாகவே இத் தகவல் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு, நீதிவேண்டி உலகத் தமிழர் பேரவை(GTF) மற்றும் பிரித்தானியத் தமிழர் பேரவை(BTF) ஆகியமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், இவர்கள் பொய்யான தகவல்களை சமர்பிப்பதாக சில தமிழர்கள் குற்றஞ்சாட்டி வருவது மிகவும் வருந்தத்தக்க விடையமாகும். இது இவ்வாறிருக்க இலங்கைக்கு எதிரான சில நாடுகள் இந்த வேலைத்திட்டத்தின் பின்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது எனவும், அதேவேளை உலகத் தமிழர் பேரவையில் லண்டனில் இருந்து அச்சுறுத்தும் வகையிலான அறிக்கையை வெளியிட்டு, இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மீண்டும் ஒரு யோசனை கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளதாக திவயின மேலும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire