தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சிறிதரன் மற்றும் கூட்டமைப்பின் வசமுள்ள உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் உறுப்பினர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜலிங்கம் போன்றோர் கலந்து கொண்டனர்
நல்லூர் பிரதேச சபையின் தலைவர் எஸ். வசந்தகுமார் மீது இராணுவப் புலனாய்வாளர்கள் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் சம்பவத்தினைக் கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ். நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப் பட்டுள்ளது.
யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று 11மணிக்கு குறித்த போராட்டம் இடம்பெற்றது. இதில் கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை இந்த போராட்டத்தின்போது மக்கள் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். மேலும் நல்லூர் பிரதேச சபையின் தலைவர் தாக்கப்பட்ட தற்கு கண்டனம் தெரிவித்தும், அவர் தாக்கப்பட்டதற்கான காரணத்தை அதாவது இராணுவ வெளியேற்றத்தை தொடர்ந்து கோரவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டனர்.
மேலும் இராணுவம் வெளியேற வேண்டும், உள்ளுராட்சித் தலைவர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும், அரச பயங்கரவாதத்தை நிறுத்தவேண்டும் என்பன போன்ற பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து, யாழ்.நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், பெருமளவு இராணுவப் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுமிருந்தனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire