காலங்கடந்த ஞானம்.இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாரியளவில் பொதுமக்கள் உயிரிழப்பதற்கு புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே காரணம் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் விசேட பிரதிநிதியும், முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
யுத்த வலயத்தில் சிக்கியிருந்த அப்பாவி பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இணைத் தலைமை நாடுகள் முன்வைத்த யோசனைத் திட்டத்தை பிரபாகரன் ஏற்றுக்கொள்ளத் தவறியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அப்பாவி பொதுமக்களின் நிலைமைகளை கருத்திற் கொள்ளாது பிரபாகரன் இறுதித் தருணம் வரையில் யுத்தம் முன்னெடுக்கப்பட வேண்டுமென கருதியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அப்பாவி பொதுமக்களை மீட்பதற்கு இணைத் தலைமை நாடுகள் முயற்சி எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
இராணுவ முன் நகர்வுகளில் அரசாங்கம் வெற்றியீட்டும் என்பதனை இணைத் தலைமை நாடுகள் அறிந்திருந்ததாகவும், அதன் காரணமாகவே அப்பாவி பொதுமக்களை மீட்பதற்கு முனைப்பு காட்டியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire