இலங்கை தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினரும், தமிழ் மகளீர் பேரவையின் முன்னாள் உபதலைவியும், இலங்கை காந்தீய அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளருமான திருமதி.பிலோமினா லோறன்ஸின்' நினைவு நிகழ்வு' பாரிஸில் 07.10.12 ஞாயிறன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
சமீப காலங்களில புகழலிட நாடுகளில் குறிப்பாக, பிரான்ஸில் நடக்கும் சமூக நிகழ்ச்சிகளில் பங்குகொள்பவர்களின் எண்ணிக்கை மிக குறைந்து விட்ட நிலையில், இந் நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்திருந்தது.
இந்நிகழ்ச்சி திருமதி. பிலோமினா லோறன்ஸின் சமூக ,அரசியல் பங்களிப்புக்களையும், செயற்பாடுகளையும் வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்தது. அதேவேளை இன்றைய இலங்கை அரசியலை மையப்படுத்திய விமர்சன உரையாடல்களையும் கொண்டதாக இருந்தது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேச்சாளர்கள், தங்கள் தங்கள் அரசியல் நிலைசார்ந்து இலங்கை அரசியல் அவதானிப்புக்களை -தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இது பல்வேறு முரண்பட்ட அரசியல் கருத்து நிலையாளர்களின் ஒன்று கூடலாயும் அமையப்பெற்றிருந்தது. இந்நிகழ்ச்;சிக்கு கவிஞரும், குறும்பட இயக்குனருமான அருந்ததி தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் இலங்கை மகளீர் பேரவையின் கொழும்பு கிளை தலைவியாக இருந்த திலகவதி. பரராஜசேகரனும் ,ஈழப்போராட்டத்தின் முக்கிய பெண் போராளியும்-அகாலம் என்ற நினைவுப் பதிவின் நூலாசிரியராகிய சி.புஸ்பராணியும், ஊடகவியலாளர் கு.உதயகுமார்;, தமிழர் விடுதலை கூட்டணியின் முக்கிய உறுப்பினர் கணேசலிங்கம் (வெள்ளையண்ணன்) மற்றும் அரசியல்,சமூக செயற்பாட்டாளர்களான அழகிரி அந்தோனிப்பிள்ளை, அசோக், கோவைநந்தன், யோகரட்ணம், சோலையுரான், .அசுரா, திருமதி. ஜெயா பத்மநாதன் ஆகியோரும் உரையாற்றினர்
இந் நிகழ்வில் திருமதி. பிலோமினா.லோறன்ஸின்,'நினைவுத்திசை' எனும் நூல்வெளியீடும்,'நினைவின் யாத்திரை'எனும் ஒளிப்படத் தொகுப்பும் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வின் வரவேற்புரையை திருமதி.பிலோமினா லோறன்ஸின் பேத்தியான அன்ரன் ஜெராட்.திவேனா வும்
நன்றியுரையை திருமதி.பிலோமினா லோறன்ஸின் மகளும், அரசியல் சமூக செயற்பாட்டாளரும்,பெண்ணியலாளருமான ஜெ.ஜென்னியும் வழங்கினார்கள்
Aucun commentaire:
Enregistrer un commentaire