samedi 7 avril 2012

மீன் தொழிற்சாலையொன்று இவ்வருட இறுதிக்குள் களுத்துறையில்

மாலைதீவு மீன் தொழிற்சாலையொன்று இவ்வருட இறுதிக்குள் களுத்துறையில் அமைக்கப்படவுள்ளது. ஜப்பானிலுள்ள மாலைதீவு மீன் உற்பத்தியாளர் ஒருவர் தொழிற்சாலையொன்றை இலங்கையில் அமைப்பதற்கு நிதியுதவி வழங்குகிறார். இதற்கான ஒப்பந்தமொன்று விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதாக கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். வருடமொன்றுக்கு இலங்கை 6000 - 8000 தொன் மாலைதீவு மீனை இறக்குமதி செய்கிறது. ஒரு கிலோ மாலைதீவு மீனின் விலை 2000ரூபா ஆகும். எனவே இங்கு மீன் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பாவனையாளர்கள் 1000 ரூபாவிற்கு மீனைக் கொள்வனவு செய்ய முடியும். மீனை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கை 21 மில்லியன் ரூபாவை பெற முடியும் எனவும் மாலைதீவு மீனையும் இதர மீன் வகைகளையும் இறக்குமதி செய்ய 14 மில்லியன் ரூபாவே செலவாகுமென அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேநேரம் 400 மில்லியன் வெளிநாட்டு செலவாணியாக பெற முடியுமெனவும் அமைச்சர் மேலும் கூறினார். கடற்தொழில் அமைச்சின் செயலாளர் டமித்த டீ சொய்ஸா இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபன தலைவர் மகீல் சேனாரட்ன மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ருவன் லங்கேஸ்வரா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்

Aucun commentaire:

Enregistrer un commentaire