dimanche 15 avril 2012

ஆர்ப்பாட்டம் குறித்து திமுத்து ஆட்டிகல

கடந்த செவ்வாய் 10.04.2012 அன்று இலங்கை அரச பாசிசத்திற்கு எதிராக லண்டனில் இலங்கைத் தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வு நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது என திமுத்து ஆட்டிக்கல குறிப்பிட்டார். தான் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னரும் அதன் முன்பாகவும் பல நாடுகளில் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன என்றும் இதில் லண்டன் நிகழ்வு குறிப்பிடத்தக்கது என்றும் இனியொருவிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் குறிப்பிட்டார். தனது தோழி ஒருவர் ஊடாக ஆர்ப்பாட்டம் குறித்து அறிந்து கொண்டதாகவும், முதல் தடவையாக தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றாக இணைந்து நடத்திய நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது என்றார். இதுவரை காலமும் இந்த இரண்டு சமூகமும் இணைந்து போராட முடியாது என்ற விம்பம் தரப்பட்டிருந்ததாகவும் இந்த இணைவு தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ராஜபக்ச சர்வாதிகாரத்தை அழிப்பதற்குரிய ஒரே வழிமுறை ஒடுக்கப்படும் சிங்கள மக்களும் தமிழ்ப் பேசும் மக்களும் இணைந்து போராடுவது மட்டுமே என்றும் அதற்கு முன்னுதாரணமாக இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வு அமைந்தது எனவும் குறிப்பிட்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire