vendredi 4 mars 2016

வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பெண் விளம்பர மாடலாக

ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு வேலைக்காரப் பெண்ணை, ஒரு ஆடை வடிவமைப்பாளர், விளம்பர மாடலாக மாற்றிய செய்தி வெளியாகியிருக்கிறது.



 

 
இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளராக திகழ்பவர் மன்தீப் நாகி. இவர் ஒருமுறை டெல்லியில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த வேலைக்கார பெண்ணைப் பார்த்ததும் அவருக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது.
அதாவது, ஒரு புதிய ஆடையை விளம்பரப்படுத்த, அந்த வேலைக்காரப் பெண்ணை ஏன் மாடலாக பயன்படுத்தக்கூடாது என்று தோன்றியுள்ளது.


 
அந்த பெண்ணுக்கு திருமணாமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. மன்தீப் அவரின் விருப்பத்தை அந்த பெண்ணிடம் தெரிவித்தார். ஆனால் அந்த பெண் ஆச்சர்யம் அடைந்துள்ளார்.  ஒரு நாள் அவகாசம் கொடுங்கள், யோசித்து சொல்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்பின் மாடலாக இருப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். 


 


 
இதுபற்றி கருத்துக் கூறிய மன்தீப் “எங்களின் புதிய ஆடைக்கு ஒரு புதிய மாடலை வைத்து விளம்பரப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். அந்த பெண்ணை எனக்குப் பிடித்திருந்தது. எனவே அவரிடம் இதுபற்றி பேசினேன். அவரும் யோசித்து இதற்கு ஒத்துக்கொண்டார்.
 
தான் அணியப்போகும் ஆடைகள் மற்றும் எடுக்கப்படும் புகைப்படங்கள் பற்றி என்னிடம் சந்தேகம் கேட்டார். நான் முழுமையாக அதுபற்றி விளக்கியதும், முழு மனதுடன் ஒத்துக் கொண்டார்.


 

 
அதன்பின் நாங்கள் அவரை புகைப்படம் எடுக்கும் வேலையை தொடங்கினோம். அவருக்கு சிகையலங்காரம் செய்து புகைப்படம் எடுத்தோம். முதலில் கேமராவை பார்த்து கூச்சப்பட்ட அவர், போகப் போக நன்றாகவே போஸ் கொடுத்தார். அந்த புகைப்படங்கள் அருமையாக வந்துள்ளது. 
 
இந்த புகைப்படம் மூலம் அந்த பெண்ணின் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழப்போகிறது என்று என்னால் எதுவும் கூற முடியாது. ஆனால் அவர் இந்த அனுபவத்தை எளிதில் மறக்க மாட்டார்” என்று கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire