jeudi 10 mars 2016

ஐபோன் ஒன்று வாங்க குழந்தையை விற்பதற்கு தமபதியினர் முடிவு

சீனாவின் பியூஜியான் மாகாணத்தை சேர்ந்தவர் துவான் இவரது மனைவி சியாவோ மேய்  இவர் கர்ப்பிணியாக இருந்தார். மேய் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பகுதி நேர வேலை செய்துவருகிறார். துவான் எப்போதும் இண்டெர்நெட் சென்டர்களில் தனது  நேரத்தை செலவிட்டு வருபவர் ஆவார்.இந்த தமபதியினருக்கு விலை உயர்ந்த  ஐபோன் ஒன்று வாங்க வேண்டும் என விரும்பினர் ஆனால் பணம் இல்லை. இதை தொடர்ந்து தங்களுக்கு பிறக்கும் குழந்தையை விற்பதற்கு இருவரும் முடிவு செய்து உள்ளனர்.

அதன் படி குழந்தை பிறப்பதற்கு முன்னரே சமூக வலைதளம் மூலம் விளம்பரம் கொடுத்து அதற்கு விலை பேசி வைத்து விட்டனர்.  பெண் குழந்தை  பிறந்து 18 நாட்கள் ஆனவுடன் அந்த குழந்தையை ரகசியமாக விற்பனை செய்தனர். குழந்தையை விற்றவுடன் சியாவோ மேய் தலைமறைவாகி விட்டார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

குழந்தையை துவான்  ரூ. 2.5 லட்சத்துக்கு (23,000 யுவான்களுக்கு) விற்று உள்ளார்  இந்தத் தொகையைக் கொண்டு ஐபோன் மற்றும் மோட்டார் பைக் ஒன்றை வாங்க அவர் திட்டமிட்டிருந்தார்.இந்த வழக்கு நீதி மன்றத்துக்கு சென்றது.பெற்றோரின்  விவாதங்களை ஏற்காத நீதிமன்றம் தாய்க்கு இரண்டரை ஆண்டுகளும், தந்தைக்கு 3 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 2 லட்சம் குழந்தைகள் கடத்தப்பட்டு ஆன்லைன் மூலம் விற்கப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் சீன அரசு கடுமை காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire