mercredi 16 mars 2016

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா

தீர்ப்பை எதிர்த்து போடப்பட்ட வழக்கின் விசாரணை உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

  நடிகரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் நிறுவப்பட்ட அதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பை பல்வேறு தடைகளை தாண்டிதான் கைப்பற்றினார் ஜெயலலிதா. பல்வேறு அவமானங்களும், சவால்களும் ஜெயலலிதாவை இந்த நிலையை அடைய வைத்தது மட்டுமின்றி, அவரை அடாவடி மற்றும் கல் நெஞ்சம் படைத்தவராக மாற்றியுள்ளது. 
 
1991-1996ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, சுமார் 66.65 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை குவித்தார். எனினும், அவரே தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும்  என்று பேராசை அடைந்தார். ஒரு காலத்தில் ஜெயலலிதாவிற்கு நெருங்கிய கூட்டாளியாக இருந்தவரும், மோசடி நடவடிக்கைகளைப் பற்றி நன்கு அறிந்தவருமான சுப்ரமணியசாமி தான் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை வெளிக் கொண்டுவந்தார். 800 கி.கி வெள்ளி, 750 ஜோடி செருப்புகள், 10,500 புடவைகள் மற்றும் 91 கைக்கடிகாரங்கள் போன்ற பொருட்களை ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் வீட்டைச் சோதனை செய்ததில் கிடைத்தவை.
 
2001-2006 இல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, திமுகவின் முயற்சியால் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது. ஜெயலலிதாவிடம் இருந்த புத்திசாலி வழக்கறிஞர்களால் இந்த வழக்கு 18 வருடங்கள் நீட்டிக்கப்பட்டது. செப்டம்பர் 27, 2014 அன்று இந்த வழக்கின் தீர்ப்பை சிறப்பு நீதிமன்றத்தில் அறிவித்தார் சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. ஜெயலலிதா, சசிகலா நடராஜன், இளவரசி மற்றும் வி.என்.சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு வருடங்கள் எளிய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். 
 
மேலும், ஜெயலலிதாவிற்கு 100கோடி ரூபாயும், மற்றவர்களுக்கு 10கோடி ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு ஜெயலலிதாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது. முதல்வராக இருந்து கொண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரானது தமிழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியது.
 
ஆதிக்கத்தில் இருந்த அதிமுக, தங்களது தலைவரை விரைவில் சிறையில் இருந்து விடுவித்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்து நால்வரும் விடுதலையும் அடைந்தனர். உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து முற்றிலும் மாற்றி, வேறு தீர்ப்பை அளித்தார். அதில், கணிதப் பிழைகள் இருந்தன. இந்தத் தீர்ப்பு எதிர் கட்சிகளின் கடும் விமர்சினத்திற்கு உள்ளானது. மறுபடியும், கர்நாடக அரசு, இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
 
கர்நடக அரசு சார்பில் வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ் தான் தற்போது இந்த வழக்கில் ஈடுபட்டுள்ளார். குமாரசாமி அளித்த தீர்ப்பை எதிர்த்து, மார்ச் 10ஆம் தேதி அவர் திறம்பட வாதாடினார். அதன்பின், உச்சநீதிமன்றம்  இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 15ஆம் தேதி ஒத்தி வைத்தது. இந்த ஒரு கணிதப் பிழையைத் திருத்தினாலே, ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு முடிவுறும் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire