lundi 28 mars 2016

உலகம் முழுவதும் வெளியான பேட்மேன் V சூப்பர்மேன்40,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில்

திரைப்படம் ஐந்து நாட்களில் 300 மில்லியன் பவுண்டுகளை வசூலித்துள்ளது அமெரிக்காவில் மட்டும் இந்தப் படம் 170.1 மில்லியன் டாலர்களை வசூலித்திருக்கிறது இந்தத் திரைப்படம் 66 சந்தைகளில் 40,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. சீனாவில் 16,000 திரையரங்குகள், அமெரிக்காவில் 4,242 திரையரங்குகள், பிரிட்டனில் 1,701 திரையரங்குகள், தென் கொரியாவில் 1, 696 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது.ஜாக் ஸ்னைடர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பென் அஃப்லெக்கும் ஹென்றி கேவிலும் நடித்திருந்தனர். ஒன்டர் உமென், ஃப்ளாஷ் என அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 டிசி காமிக்ஸ் பாத்திரங்களை களமிறக்க வார்னர் பிரதர்ஸ் திட்டமிட்டுள்ளது.இதில் முதலாவதாக ஆகஸ்ட் மாதம் சூஸைட் ஸ்குவாட் வெளியாகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire