mardi 9 octobre 2012

அரியாலையில் பாழடைந்த கிணற்றிலிருந்து வெடி குண்டுகள் மீட்பு

யாழ்ப்பாணம் அரியாலை மணியம் தோட்டப் பகுதியிலுள்ள மக்கள் பாவனையற்ற பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து விடுதலைப் புலிகள் பயன்படுத்திய வெடி பொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர். 

யாழ்.இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. 

இராணுவத்தினரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும் பொலிஸாரினால் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, நீதிமன்றின் உத்தரவின் பேரிலேயே இவ்வாயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் கூறினர். 

மோட்டார் குண்டுகள் 240, கைக்குண்டுகள் 42, 40 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் 8, குண்டுகளை செயலிழக்க வைக்கும் பியூஸ் வகை 3 பெட்டிகள், கிளைமோர் 2, 12.7 கிராம் ரவைகள் 1615 போன்ற வெடிபொருட்கள் மீட்கப்பட்டு, குண்டு அகற்றும் பிரிவினரால் அழிக்கப்பட்டுள்ளன. 

Aucun commentaire:

Enregistrer un commentaire