mardi 9 octobre 2012

சேவைக்கு தடையாக அமைந்துள்ள சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும்: ஜனாதிபதி

மக்கள் சேவைக்கு தடையாள அமைந்துள்ள சகல சட்டங்களிலும் திருத்தம் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

   மக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சில சட்டங்களினால் இடையூறு ஏற்பட்டுள்ளது.

   இவ்வாறான சட்டங்களை கண்டறிந்து அவற்றில் திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியமானது.

   மக்கள் ஆணைக்கு புறம்பாக செயற்பட எவருக்கும் உரிமை கிடையாது.

   நாட்டின் அபிவிருத்திக்காக அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

   2013ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து கோரும் நோக்கில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire