dimanche 31 mars 2013

மீண்டும் தலை தூக்கி உள்ள யாழ் வாள் சன்டைகள்

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற வாள் வெட்டில், ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் யாழ். மாநகரசபை ஊழியர்கள் ஐவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாவாந்துறை மீன்சந்தை குத்தகைக் குழுவினருக்கும் யாழ். மாநகரசபை ஊழியர்களுக்கும் இடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைக்கு வலது கையாலும் புலிகளுக்கு இடது கையாலும் போராயுதங்களையும் அதற்கான அலோசனைகளையும் மேற்குலகம் வழங்கியது;கேபி

இலங்கை மீது போர்குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றது மேற்குலகம். ஆனால் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கும் மேற்குலகிற்கும் அண்ணன் தம்பி உறவு என்பது ஒன்றும் இரகசியமானது அல்ல. இறுதி வரைக்கும் இலங்கைக்கு வலது கையாலும் புலிகளுக்கு இடது கையாலும் போராயுதங்களையும் அதற்கான அலோசனைகளையும் மேற்குலக வழங்கி கொண்டு வந்திருக்கின்றது என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

இவ்விடயத்தினை கடந்த வாரம் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவும் தெரிவித்திருந்தார். எந்த நாடுகள் புலிகளுக்கு உதவின என்றும் எவ்வாறு எந்த நோக்கத்திற்காக வழங்கின என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் புலிளியக்கத்தின் ஆயுதக்கடத்தன் மன்னனான கே.பி எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் „புலிகள் இயக்கத்திற்கு 11 நாடுகள் ஆயுத உதவியைச் செய்தன. ஆயுதங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களையும் கொடுத்து உதவின. அந்த நாடுகள் குறித்த தகவல்களை முழுமையாக வெளியிடுவேன்' என்று கூறியுள்ளார்.

பாப்பரசரின் ஈஸ்டர் செய்தி;இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல், இராக் மற்றும் சிரியா.மாலியிலும் நைஜீரியாவிலும் காங்கோ குடியரசிலும் மத்திய ஆப்ரிக்க குடியரசிலும் அமைதி திரும்ப வேண்டும்

ஈஸ்டர் கொண்டாட்டத்தின்போது பாப்பரசர்
இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதிய பாப்பரசராக பொறுப்பேற்ற கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ், உர்பி எட் ஒர்பி என்ற தனது முதலாவது பாரம்பரிய ஈஸ்டர் பண்டிகை செய்தியை வழங்கினார்.
குறிப்பாக, இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல், இராக் மற்றும் சிரியா விவகாரங்களை அவர் சுட்டிக்காட்டினார்.
மாலியிலும் நைஜீரியாவிலும் காங்கோ குடியரசிலும் மத்திய ஆப்ரிக்க குடியரசிலும் அமைதி திரும்ப வேண்டும் என்றும் பாப்பரசர் தனது ஈஸ்டர் செய்தியில் கேட்டுக்கொண்டார்.
வடகொரியா- தென்கொரியா இடையே நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்றும் பாப்பரசர் வலியுறுத்தினார்.
21-ம் நூற்றாண்டில் மிகமோசமான அடிமை முறையாக விளங்கும் ஆட்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் நடவடிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய பாப்பரசர் முன்னெப்போதும் இல்லாதவகையில் புதிய முறையிலான வாழ்க்கைமுறையை வெளிப்படுத்துவதாக வத்திக்கானில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.
தனக்குரிய மாளிகைக்குச் சென்று தங்க மறுத்துவரும் பாப்பரசர் பிரான்சிஸ், மற்றப் பாதிரியார்களுடன் பொது உணவறையிலேயே உணவு உண்பதாகவும் கூறப்படுகிறது.

தனி ஈழம் கோரியும் திருநங்கைளும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.



ஈழத் தமிழர்களுக்காக திரு- நங்கைகள் உண்ணாவிரதம் !
***********************************************
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் கடந்த 1 மாதமாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கல்லூரி மாணவர்கள், சினிமா துறையினர், தமிழ் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் என பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது திருநங்கைகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே இன்று திருநங்கைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் வடசென்னை பகுதியில் உள்ள திருநங்கைகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் தமிழக மாணவர்களுக்கு ஆதரவாகவும் ,தனித் தமிழீழத்திருக்கு பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும் , ராஜபக்சேவை இனப்படுகொளையாளி என அறிவித்து தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் ,தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா அரசு ஏற்கவேண்டும் , உடனடியாக நடவடிக்கை மேட்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.

மேலும் இது ஓர் முதற்கட்டமான போராட்டம் அடுத்த கட்டமாக தமது போராட்டம் இந்தியா அளவில் இருக்கும் என்றும் சாகும் வரை தொடர் உண்ணவிரதம் இருக்கவும் தங்கள் தயார் என தெரிவித்தனர்.
ஈழத் தமிழர்களுக்காக திரு- நங்கைகள் உண்ணாவிரதம்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் கடந்த 1 மாதமாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கல்லூரி மாணவர்கள், சினிமா துறையினர், தமிழ் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் என பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது திருநங்கைகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே இன்று திருநங்கைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் வடசென்னை பகுதியில் உள்ள திருநங்கைகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் தமிழக மாணவர்களுக்கு ஆதரவாகவும் ,தனித் தமிழீழத்திருக்கு பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும் , ராஜபக்சேவை இனப்படுகொளையாளி என அறிவித்து தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் ,தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா அரசு ஏற்கவேண்டும் , உடனடியாக நடவடிக்கை மேட்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.

மேலும் இது ஓர் முதற்கட்டமான போராட்டம் அடுத்த கட்டமாக தமது போராட்டம் இந்தியா அளவில் இருக்கும் என்றும் சாகும் வரை தொடர் உண்ணவிரதம் இருக்கவும் தங்கள் தயார் என தெரிவித்தனர்.


ஒட்டு மொத்த இந்தியாவின் கருத்து அல்ல'தமிழகத் தீர்மானம்

வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்இலங்கைக்கு எதிராக தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை இந்திய மத்திய அரசு நிராகரித்துள்ளது.
தமிழகத்தின் தீர்மானத்தை ஒட்டுமொத்த இந்தியாவின் நிலைப்பாடாக கருதமுடியாது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.
சீஎன்என்- ஐபிஎன் செய்திச் சேவையில் நடந்த நேரடி அரசியல் சம்பாஷனை நிகழ்ச்சியிலேயே சல்மான் குர்ஷித் தமிழக சட்டமன்றத்தின் தீர்மானத்தை நாட்டின் ஏனைய மாநிலங்கள் ஆதரிக்கவில்லை என்று கூறினார்.
'தமிழ்நாட்டில் மிகவும் உணர்வுபூர்வமான ஒரு நிலைமை இருக்கிறது என்பதை என்பதையும் நாங்கள் கவனத்தில் எடுக்கிறோம்' என்று அவர் கூறினார்.
ஒரு மாநிலத்தின் உணர்வுகள் குறித்து கரிசனையில் எடுக்க முடியுமே தவிர, அவை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையை நட்பு நாடல்ல என்று அறிவிப்பதற்கும், இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டுவருவதற்கும் தனி ஈழத்துக்காக இலங்கையில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று ஐநாவை கோருவதற்கும் இந்திய அரசு முன்வரவேண்டும் என்று தமிழக அரசு அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது.
நாடு முழுவதிலுமுள்ள மற்ற சட்டமன்றங்களும் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை எடுத்தால் நிலைமை வேறுவிடயம் என்றும் சல்மான் குர்ஷித் கூறினார்.

மிரட்டும் இலங்கை சுதந்திர கட்சியை செர்ந்த துனை தலைவர்களூள் ஒருவரனா கருணா;புலிகளுக்கு உதவி வழங்கிய நாடுகளின் பட்டியலை வெளியிடுவேன்


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு உதவிகளை வழங்கிய நாடுகள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றிய தகவல்களை வெளியிடப் போவதாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி வழங்கிய நபர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் எனக்கு மட்டுமெ தெரியும். நோர்வே, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு நான் விஜயம் செய்திருக்கின்றேன்.
409 ரக ஆயுதங்கள் தொடர்பான பட்டியல் ஒன்றை பங்கொக் ஹோட்டல் ஒன்றில் வைத்து ஐயர் என்ற நபருக்கு நானே வழங்கினேன். இந்தப் பட்டியலை வழங்குமாறு பிரபாகரன் எனக்கு பணிப்புரை விடுத்தார்.
நோர்வே ஆயுத நிறுவனங்களுக்கும் நான் விஜயம் செய்திருந்தேன். கண்ணாடி மாளிகைகளிலிருந்து கற்களை எறிய வேண்டாம் என அரச சார்பற்ற நிறுவனங்களிடம் கேட்கின்றேன்.
அரச சார்பற்ற நிறுவனங்களும் புலிகளக்கு உதவிகளை வழங்கியிருந்தன.
துப்பாக்கி துளைக்காத பிராடோ ரக வாகனமொன்றை அரச சார்பற்ற நிறுவனமொன்று பிரபாகரனுக்கு வழங்கியிருந்தது என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
Karuna Back from Parisஅண்மையில் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு மனித உரிமை கண்காணிப்பகம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் நோக்கில் விநாயகமூர்த்தி முரளிதரன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

samedi 30 mars 2013

பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் உள்ள பெரிய பிரச்சினை முடி உதிர்தல் ஆகும்;பிரச்சனைகளை சரிசெய்யலாம்.

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் உள்ள பெரிய பிரச்சினை முடி உதிர்தல் ஆகும்.
இவர்கள் கீழே உள்ள சில வழிமுறைகளைப் பின்பற்றி முடிஉதிர்தல், இளநரை போன்ற பிரச்சனைகளை சரிசெய்யலாம்.
* முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து, ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும் உங்கள் கூந்தல்.
* முடி உதிர்வதை தடுக்க அதிகம் அயர்ன், வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும்.
* தற்போது ஏகப்பட்ட பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது. அது முற்றிலும் தவறு. தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும். அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.
* எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். சிறிது நல்ல எண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். முடி உதிர்வதையும் தடுக்கலாம்.
* கறிவேப்பிலை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்.

முக்கியத் தலைவர்கள் தமிழகத்தில் படிப்பறிவு இல்லாதவர்கள் - சுப்பிரமணியம் சுவாமி

முதல்வர் ஜெயலலிதா சுயநினைவை இழந்து விட்டார் என்றும் தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் படிப்பறிவு இல்லாத காரணத்தால் சுயமாக சிந்திக்காமல் பேசுகிறார்கள் என்றும் அதிரடியாக பேசியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி.  சர்வதேச விசயமோ, இந்திய அரசு தொடர்புடையதோ அதிரடியாக கருத்து கூறுவார் சுப்ரமணியசுவாமி. சீரியசான விசயங்களை கூட சில சமயம் காமெடியாக பேசுவதில் சுப்ரமணியசுவாமி நிகர் யாருமில்லை.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சுப்ரமணியசுவாமி, தமிழ்நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட தலைவர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்று அதிரடியாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இலங்கை விவகாரம் குறித்துப் பேசியபோது இவ்வாறு கூறிய சுப்ரமணிய சுவாமி, இலங்கை குறித்த ஜெயலலிதாவின் தற்போதைய கருத்துகள் கேட்பதற்கு மிகவும் சுவையாக இருக்கின்றன.
ஜெயலலிதா தன்னுடைய சுயவுணர்வை இழந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். வெளிநாட்டு விவகாரங்களில் அவர் தலையிடக்கூடாது. அது பற்றி முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசின் உரிமை என்றார். அதேபோல் சஞ்சய் தத் விவகாரத்தில் கருத்து கூறிய சுவாமி, பொதுமன்னிப்பு கோரும் விவகாரத்தில் அவர் சுயமாக அவரே கையெழுத்திட்டு மனு போட வேண்டும்; அதை விடுத்து மற்றவர்கள் அவ்வாறு அவரைச் செய்யச் சொல்வது வீண் முயற்சி என்றார் சுவாமி.
சுப்ரமணியசுவாமி சமீபகாலமாக இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அதிக அளவில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இது தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வாளர்களை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசியல் தலைவர்களைப் பற்றியும், முதல்வர் ஜெயலலிதா பற்றியும் கூறிய கருத்துக்கள் கடும் புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறை கைதிகளின் பாதங்களை கழுவியுள்ளதுடன் முத்தமிட்டு ஆசிர்வாதம் செய்துள்ளார் 12 சிறை கைதிகளின் பாதங்களை ;பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யபட்ட புனித வியாழன் பிரார்த்தனை நிகழ்வில் கலந்துகொண்ட பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் ரோமில் உள்ள கெஸல் டீல் மரம்மோ சிறைச்சாலையில் உள்ள இரண்டு பெண்கள் உட்பட 12 சிறை கைதிகளின் பாதங்களை கழுவியுள்ளதுடன் முத்தமிட்டு ஆசிர்வாதம் செய்துள்ளார்.

இச்சிறைகைதிகளில் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களும் இரண்டு பெண்கள் உள்ளடங்கியிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதுடன் இங்கு கருத்து தெரிவித்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் 'ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும்' தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 'நான் இதனை இதயபூர்வமாக செய்கிறேன் இதுவும் எனது கடமை. நான் உங்களுக்கு சேவை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறேன். இதைத்தாக் எனக்கு கடவுள் கற்றுகொடுத்துள்ளார்' என அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் தெரிவித்தார் இதனை பார்த்துக்கொண்டிருந்த பலர் கண்ணீர்விட்டதாக வத்திகான் பேச்சாளர் பெட்ரிகோ லொமபாரட்டி தெரிவித்துள்ளார்.


vendredi 29 mars 2013

ஸ்ரீலங்கா தமிழர்களுக்கும் மற்றும்; சிங்களவர்களுக்கும் பிரச்சினையை ஏற்படுத்துமா?மேற்கொள்ளப்படும் கூச்சல்கள்;சோ


choதமிழ் அரசியல் வார இதழான துக்ளக்கின் ஆசிரியரான சோ ராமசாமி,அவர்கள் தமிழ் நாட்டில் மிகவும் புகழ் வாய்ந்த அரசியல் ஆய்வாளராவார். ஷோபா வாரியாருக்கு அவர் வழங்கியுள்ள இந்த பிரத்தியேக நேர்காணலில் அவர் ஸ்ரீலங்காத் தமிழர்கள் விடயம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திராவிட முன்னேற்ற கழகம் வெளியேறியது, மற்றும் அடுத்து வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான அவரது எண்ணங்கள் என்பனவற்றை வெளிப்படுத்துகிறார்.
  • திராவிட முன்னேற்ற கழகம்(திமுக) ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து(யு.பி.ஏ) வெளியேறப்போவதாக அச்சுறுத்தல் விடுத்தபோது, அவர்கள் மற்றுமொரு நாடகத்தை அரங்கேற்றுவதாகத்தான் பலரும் எண்ணினார்கள். ஆனால் இறுதியாக அவர்கள் தங்கள் ஆதரவை விலக்கி விட்டார்கள். இந்தமுறை அவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து வெளியேறுவார்கள் என நீங்கள் எதிர்பார்த்தீர்களா?
இந்த முடிவையிட்டு கருணாநிதி மகிழ்ச்சி அடைகிறார் என்பதில்  எனக்கு இன்னமும் நிச்சயம் இல்லை,ஏனெனில் தேர்தல்களைப் பொறுத்தமட்டில், ஒரு சத விகிதம் அல்லது ஒன்றரை சத விகிதம் வாக்குகளைப் பெறக்கூடிய சிறிய கட்சிகளைக்கூட அவர் தன்னுடன் சேர்த்துக் கொள்வார். தற்போதைய சூழ்நிலையில் - அதாவது திமுக வுக்கு எதிரான வழக்குகள் போன்றவற்றில் - இன்னமும் அவருக்கு உதவி செய்யக்கூடிய ஒரு கட்சி என்றால் அது காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் திமுகவுக்கு உதவி செய்கிறதோ இல்லையோ, ஏனைய கட்சிகள் அதை செய்யப்போவதில்லை.
மற்றும் அவரால் பாரதிய ஜனதா கட்சியிடம் போகமுடியாது, ஏனெனில் அவரது முந்தைய நிலைப்பாடு மற்றும் முஸ்லிம் வாக்குகளை கவர்ந்திழுக்கும் அவரது நம்பிக்கை என்பன அதற்கு தடையாக உள்ளன. அவர் அதை கொண்டிருக்கிறாரோ இல்லையோ என்பது வேறு விடயம்.
எனவே சிலகாலங்களுக்குப் பின்னர் அவரை சமாதானப்படுத்துவதற்காக ,அவரை முகஸ்துதி செய்யும்படியாக, ஸ்ரீலங்கா பற்றிய சில விடயங்களை கூறி அவரை வசப்படுத்த சில சூத்திரங்களை காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளலாம். எல்லாவற்றையும் விட தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களது வாக்குகளை கவரும் சக்தி தனக்குத்தான் உள்ளதாக அவர் தன்னைப்பற்றி வெளிப்படுத்தி வருகிறார்.
இப்போது அவர் பீற்றிக் கொள்ளும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பான டெசோவுக்கு சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கௌரவமான சவ அடக்கம் செய்யப்பட்டது. அதன் சமாதியில் இருந்து அதை அவர் தோண்டி எடுத்ததுடன், டெசோவின் எலும்புக்கூடு இப்போது ஊடகங்களில் நாட்டியமாடி வருகிறது. மக்கள் அதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை. ஸ்ரீலங்கா பற்றி அவர் வெளிக்காட்டும் தோரணைகளால் யாருமே ஈர்க்கப்படுவதில்லை. அவர் அதிகாரத்தில் இருந்தபோது அந்த மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதும் அவர் எதுவுமே செய்யவில்லை. நான் அதை யுத்தம் என்று சொல்ல மாட்டேன், அது கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ஒரு இராணுவ நடவடிக்கை. இப்போது அவர் அதைப்பற்றிய ஒரு பிரேதப் பரிசோதனை அறிக்கையை கோருகிறார்.
  • ஸ்ரீலங்காவில் யுத்தம் 2009 ல் முடிவடைந்துவிட்டது. தமிழ் நாட்டில் இந்த விடயம் ஏன் திடீரென உயிர் பெற்று எழுந்தது?
எங்கெல்லாம் தமிழர்கள் வாழுகிறார்களோ அங்கெல்லாம் தமிழர்களின் பாதுகாவலன் எப்பொழுதும் தான்தான் என கருணாநிதி நினைத்து வந்தார். இப்போது அந்த மேடை அவரிடமிருந்து ஜெ.ஜெயலலிதாவினால் திருடப்பட்டு விட்டது, அவர் இப்பொழுது தள்ளாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இப்போது ஜெயலலிதாதான் தேவையான அனைத்துப் போராட்டங்களையும் நடத்துகிறார், தமிழர்களை பொறுத்தவரை, அவர் ஒரு இரும்புப் பெண்மணியாகவே காட்சியளிக்கிறார். கருணாநிதிக்கு இப்போது ஜெயலலிதாவுடன் போட்டி போட்டு தனது பெருமையை திரும்ப பெறவேண்டியுள்ளது.
  • தமிழ் நாட்டிலுள்ள சாதாரண மக்களுக்கு மின் தட்டுப்பாடு தண்ணீர் தட்டுப்பாடு போன்ற ஏராளமான வேறு சொந்தப் பிரச்சினைகள் உள்ளபோது, ஸ்ரீலங்காவில் நடப்பதை பற்றி அவர்கள் உண்மையிலேயே கவலைப்படுவார்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?cho-3
இதைத்தான் நான் எப்போதும் சொல்லி வருகிறேன் ஸ்ரீலங்காத் தமிழர்கள் பிரச்சினை தமிழ்நாட்டில் ஒரு தேர்தல் பிரச்சினையாக இருந்ததே இல்லை. இந்த விடயத்துக்காக அவர்கள் ஒருபோதும் வாக்களித்ததில்லை.அங்கு நிலவும் பிரச்சினைகளுக்காக இங்குள்ள மக்கள் அதிகம் வருத்தப் படுபவர்களாக இருந்தால், பின்னர் வைகோ ஏன் வெறும் 2 சதவிகித வாக்குகளை மட்டும் பெற்றார்? இந்த விடயத்தை பற்றிப் பேசும் வேறு சில சிறிய கட்சிகளால் சொந்தமாக ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியாமல் போனது ஏன்? உண்மையில் தமிழர்கள் அவர்களைப்பற்றி அக்கறை கொண்டுள்ளார்கள். ஸ்ரீலங்காத் தமிழர்கள், கௌரவம், கண்ணியம், சமாதானம் மற்றும் சிங்களவர்களைப்போல சம உரிமையுடன் வாழவேண்டும் என்று இங்குள்ள தமிழர்கள் விரும்புகிறார்கள்.
  • வரையறுக்கப்பட்ட சில சிறிய குழுக்கள்தான் இந்த இரைச்சலை ஏற்படுத்துகின்றன, மற்றும் ஊடகங்கள் அதை பரபரப்பான செய்திகளாக பரிமாறுகின்றன. இங்கு ஒரு பெரிய எழுச்சி உள்ளதாகக் காட்டப்படுகிறது. மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
எத்தனை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்? ஒரு கல்லூரியில் 3,000 மாணவர்கள் இருந்தால் அவர்களில் 150 பேர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். மற்றவர்கள் வீட்டுக்குப் போய் விடுமுறையை அனுபவிக்கிறார்கள். முழு மாணவர் சமுதாயமே இதைப்பற்றி கவலைப்படுகிறது என்று இல்லை.
இளம் தொழில் நிபுணர்களும் மாணவர்களுடன் இந்த ஆhப்பாட்டங்களில் கலந்து கொண்டுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றனவே…… எத்தனைபேர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? வெகு சிலர் மட்டுமே அதைச் செய்கிறார்கள்.

  • எல்.ரீ.ரீ.ஈயின் முன்னாள் பேச்சாளர் வேலாயுதம் தயாநிதி ஒரு நேர்காணலில் தமிழ் நாட்டில் உள்ள அரசியற் கட்சிகள் தங்கள் அரசியல் இலாபத்துக்காக ஸ்ரீலங்கா தமிழர்களின் பெயரைப் பயன்படுத்துவதாக ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்கள் எண்ணுவதாகச் சொல்லியுள்ளாரே. நீங்களும் அப்படி எண்ணுகிறீர்களா?cho-4
ஆம். ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு அது மிக நன்றாகத் தெரியும். புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புகூட ஸ்ரீலங்கா ஜனாதிபதியை யுத்தக் குற்றவாளியாக அறிவிக்க வேண்டுமென்றோ, மற்றும் இனப் படுகொலை என்கிற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்றோ பெரிதாக சத்தம் எதுவும் எழுப்பவில்லை. ஆனால் தமிழ் நாட்டிலுள்ள சில சிறு குழுக்கள் அதைச் செய்கின்றன. சிலவேளை வெளிநாட்டிலுள்ள சில இயக்கங்கள் அவர்களுக்கு நிதி அளித்திருக்கலாம், எனக்கு அது பற்றித் தெரியாது.
கொழும்புத் தமிழர்கள்,, இந்திய வம்சாவளித் தமிழர்கள் பற்றி என்ன சொல்வது? தோட்டப் பகுதி தமிழர்கள் பற்றி என்ன சொல்வது? அவர்களும் தமிழர்கள் தானே, இங்கேயுள்ள எங்களைப் போன்ற தமிழர்கள்தான் அவர்களும். அவர்கள் கொழும்பிலோ, தோட்டப் பகுதிகளிலோ அல்லது கிழக்கிலோ ஆர்ப்பாட்டம் எதனையும் நடத்தவில்லை.
இப்போது அவர்களுக்கு வேண்டியதெல்லாம் புனர்வாழ்வு. தோட்டப்பகுதி தமிழர்களையோ அல்லது கொழும்புத் தமிழர்களையோ அல்லது கிழக்குத் தமிழர்களையோ விட்டு விடுங்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள இடம்பெயர்ந்த தமிழர்கள்தான் புனர்வாழ்வு மற்றும் இந்தியாவில் நாங்கள் கொண்டுள்ளதை போன்ற ஒரு வகை சுயாட்சியை விரும்புகிறார்கள்.
  • இங்கு மேற்கொள்ளப்படும் கூச்சல்கள், ஸ்ரீலங்கா தமிழர்களுக்கும் மற்றும்; சிங்களவர்களுக்கும் அங்கு பிரச்சினையை ஏற்படுத்துமா?
நிச்சயமாக, அது சிங்களவர்களுக்கும் மற்றும் தமிழ் பொதுமக்களுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தும். இது எந்த வழியிலும் அவர்களுக்கு உதவப் போவதில்லை. உண்மையில் நான் சொல்வது என்னவென்றால் தமிழர்களின் வெற்றி வீரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் எல்.ரீ.ரீ.ஈயின் முழு அழிவுக்கும் காரணகர்த்தாக்கள், ஏனெனில் இந்தியா தலையிட்டு ஸ்ரீலங்கா நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் என்று இவர்கள்தான் எல்.ரீ.ரீ.ஈ யினை நம்ப வைத்தார்கள்.
  • ஸ்ரீலங்காவுக்கு எதிரான ஒரு பிரேரணையை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக விரும்புகிறது. அப்சல் குரு தூக்கிலிடப்படுவதற்கு எதிராக பாகிஸ்தான் பாராளுமன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியபோது,அது ஒரு உள்நாட்டுப் பிரச்சினை மற்றும் பாகிஸ்தான் அதில் தலையிடுவதற்கு உரிமையில்லை என்று இந்தியா அதைக் கண்டித்தது, மற்றொரு நாட்டுக்கு எதிராக இந்தியா அதனை செய்ய முடியுமா?
ஆம், பாகிஸ்தான் செய்ததை இந்தியா ஆட்சேபித்து அது உங்கள் வேலை இல்லை என்று சொன்னது. அதே வழியில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக இந்தியப் பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதும் இந்தியாவின் வேலை இல்லை. அது ஒரு தீய நடைமுறைக்கு வழி வகுக்கும், அது காஷ்மீர் விடயத்தில் எங்களைப் பாதிக்கும்.காஷ்மீர் விடயத்தில் தங்களுக்கு எதிரான புகார்களுக்கு இந்தியா பொறுப்புக்கூற வேண்டும் என்ற வகையான ஒரு கோரிக்கையை பாகிஸ்தான் எழுப்பலாம்,அது உண்மையோ இல்லையோ அது வேறு விடயம், ஆனால் கூச்சல் போடுவதற்கு அதில் அடித்தளம் உள்ளது,மற்றும் பாகிஸ்தான் நிச்சயம் கூச்சல் போடும்.
  • காங்கிரஸ், திமுகவை திருப்திப் படுத்துவதற்காக ஸ்ரீலங்காவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதைப்பற்றி எதிர்க் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியதே…..
காங்கிரஸ் அதை உண்மையிலேயே விரும்பியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அப்படி ஒரு தீர்மானம் கொண்டுவருவதை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் மற்றவர்களுடன் கலந்தாலோசிப்பதை பற்றி அவர்கள் பேசினார்கள்.cho-5
ஸ்ரீலங்கா எதிர்நோக்கிய பிரச்சினைகள் யாவும் ,இந்திரா காந்தியின் ஆட்சியின்போது, எல்.ரீ.ரீ.ஈக்கும் மற்றும் ஏனைய தமிழ் போராளிக் குழுக்களுக்கும் இந்தியா பயிற்சி அளித்ததினாலேயே மோசமடைந்தது.அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு ஆயுதங்களும் மற்றும் நிதியுதவியும் இந்தியாவால் வழங்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக ராஜிவ் காந்தி விடயங்களை வித்தியாசமாகவும் மற்றும் புத்திசாலித்தனமாகவும் பார்த்தார், அதன் காரணமாக ஸ்ரீலங்காவுடன் ஒரு உடன்படிக்கையை மேற்கொண்டார். எல்.ரீ.ரீ.ஈயும் மற்றும் யாழ்ப்பாணத் தமிழர்களும் ஒத்துழைப்பு நல்கியிருந்தால்,இப்போது அவர்கள் நிலமை மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். அந்த ஒப்பந்தத்தின் கீழ் ஒருவகையான சுயாட்சி முறை இருந்தது ஒரு கூட்டாட்சி கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியும் இருந்தது, சிங்களவர்களுக்கு சமமாக தமிழர்களுக்கும் சம அந்தஸ்து வழங்குவதற்கான ஒரு முயற்சியும் அதில் இருந்தது. அவை அனைத்தும் வி.பிரபாகரனால் அழிக்கப்பட்டன,மற்றும் இங்குள்ள மக்களும் அவருக்கு ஆதரவு வழங்கினார்கள்.
அங்குள்ள தமிழர்கள் விடயத்தில் நாங்கள் கெடுதலையே செய்துள்ளோம். இப்போதும் கெடுதல் செய்வதை தொடர்ந்து வருகிறோம்.
  • ஐநா தீர்மானத்தின்போது இந்தியா ஸ்ரீலங்காவுக்கு எதிராக வாக்களித்தது, சீனாவை ஸ்ரீலங்காவுக்கு நெருக்கமாக கொண்டுவந்துள்ளாகக் கூறப்படுகிறதே. இந்தப் பிரதேசத்தில் எந்த வகையான தாக்கத்தை அது ஏற்படுத்தும்?
இப்போது சீனா தங்கள் ஒப்பந்தங்களை ஸ்ரீலங்காவில் விரைவாகச் செயற்படுத்த ஆரம்பிக்கும். அவர்கள் அதிக பணத்தை அங்கு செலவிட தயாராக உள்ளார்கள்,ஏனெனில் அவர்கள் தங்கள் செல்வாக்கின் வீச்சை பரவலாக்க விரும்புகிறார்கள்.
  • அப்படியான ஒரு நிலைக்கு இந்தியா பொறுப்பில்லையா?
மத்திய அரசாங்கத்தை பொறுத்தவரை,தமிழ்நாட்டில் இருந்து எழும் கடுமையான குரல்களோடு ஒத்துப் போகவேண்டும் என்கிற தார்மீக கடப்பாடு அதற்கு இல்லை,ஏனெனில் அது ஒரு சிறு பகுதியினரின் குரல்கள். அது இங்குள்ள முழு தமிழ் மக்களினதும் கருத்து அல்ல.
  • கூட்டணி அரசியல்தான் இந்த நிலமைக்கு பொறுப்பா?
நான் அப்படி நினைக்கவில்லை. மத்திய அரசு எப்போதுமே அப்படித்தான் நடந்து வருகிறது. ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து தமிழ் நாட்டிலுள்ள சிறிய கட்சிகளிடம் எங்கே, மற்றும் எப்போது அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்வதற்குரிய தார்மீகத் துணிவு அதற்கு குறைவாக உள்ளது. இந்தக் கட்சிகள் யாவும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டால் தோற்கடிக்கப் பட்டுவிடும்,அநேகமாக கட்டுப்பணத்தையே இழந்துவிடும். மத்திய அரசு அவர்கள் முன்னால் எழுந்து நிற்க முடியும்.
  • இந்தியாவுக்கு இப்போது அதன் அயலவர்களுடன் ஒரு நல்ல உறவு இல்லை, மற்றும் அதன் அயல் வட்டத்தில் ஒரு ஒற்றை நட்பு நாடு கூட இல்லை. நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏதாவது தவறு உள்ளதா?
பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் என்பன இந்தியாவுடன் நட்பாக இல்லாமலிருப்பது இந்தியாவின் தவறு என்று நான் நினைக்கவில்லை. ஸ்ரீலங்காவை பொறுத்தமட்டில் இந்தியா தவறிழைத்துள்ளது. இந்தியா ஸ்ரீலங்காவுக்கு இன்னும் அதிக உதவிகளைச் செய்திருக்க வேண்டும்.
  • இப்போது யு.பி.ஏ அரசாங்கத்திலிருந்து திமுக வெளியேறிவிட்டது, உடனடியாக பொதுத்தேர்தல் வரும் என்று நீங்கள் கணிப்பிடுகிறீர்களா?
எண்ணிக்கைளை பொறுத்தமட்டில் அரசாங்கம் எப்படியாவது சமாளித்துவிடும் என்றுதான் நான் எண்ணுகிறேன். உடனடியாக ஒரு தேர்தல் வராது.
  • அடுத்த மக்களவை தேர்தலில் திமுக தனித்து போட்டியிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
நான் நினைக்கிறேன், காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரண்டுமே விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை கவர்ந்திழுக்க முயற்சிக்கும். அவர் காங்கிரசின் பக்கம் கூட போகலாம், அப்படி நடந்தால், இங்கு மும்முனை போட்டி ஏற்படும், அது ஜெயலலிதாவுக்கு உதவியாக இருக்கும். அங்கு ஒரு காங்கிரஸ் முன்னணி,ஒரு திமுக முன்னணி,மற்றும் ஒரு அஇஅதிமுக முன்னணி என்பன இருந்தால்,  அதில் அஇஅதிமுக வெற்றி பெறும்.அல்லது சில முகஸ்துதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு திமுக காங்கிரசின் பின்னால் செல்லவும் கூடும்.
  • ராகுல் காந்தி தனக்கு இந்த ஓட்டங்களில் ஆர்வமில்லை என்று சொல்லுகிற போதும் 2014ல் நடக்கவிருக்கும் போட்டி  மோடிக்கும் மற்றும் ராகுலுக்கும் எதிரானதாகத்தான் இருக்கும் என்று முழு ஊடகங்களுமே பேசுகின்றனவே. அது நடக்கும் என உங்களுக்கு தோன்றுகிறதா?
தான் ஓட்டத்தில் இல்லை என்று ராகுல் காந்தி சொன்னாலும் அவர் அதில் தீவிரமாக இருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன். அவருடைய வார்த்தைகளை வெறும் முகஸ்துதி என்றுதான் நான் எடுத்துக் கொள்கிறேன். அவர் ஒரு பலமற்ற அரசாங்கத்துக்கு தலமையேற்க விரும்பாமலிருக்கலாம். அவர் ஒரு உறுதியான காங்கிரஸ் அரசைத்தான் விரும்புகிறார், அது அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். அதனால்தான் நான் ஓட்டத்தில் இல்லை என்று அவர் கூறி வருகிறார். எனினும் காங்கிரசுக்கு அது மிகவும் கடினமான ஒன்றாகத்தான் இருக்கப்போகிறது.
  • அப்போ அது மோடிக்கு எதிராக காங்கிரசிலிருந்து யாராவது ஒருவர் என்றிருக்குமா?
பா.ஜ.க மோடியை முன்னிறுத்தினால் அதற்கு நல்லது. அப்போது பிரச்சினை அவரைப் பற்றியதாகவே இருக்கும், மற்றும் அவர் அதில் வெற்றியும் பெறுவார்.
  • பா.ஜ.க மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால்,இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் அதற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று அநேகர் சொல்கிறார்களே?
குஜராத்திலுள்ள முஸ்லிம்கள் மோடியுடன் இருக்கிறார்கள் என்றால், அது இந்தியா முழுவதிலும் நடக்கலாம். அதை ஒரு பக்கமாக ஒதுக்கி விடுங்கள், மோடியின் கீழ் பா.ஜ.க நன்றாக செயலபட முடியும்,ஏனெனில் குஜராத்தில் அவரது செயற்பாடு நன்றாக உள்ளது. நாட்டை வழி நடத்துவதற்கு ஒரு நேர்மையான அரசியல்வாதியை மக்கள் தேடுகிறார்கள், அதற்கு அவர் மிக நன்றாகப் பொருந்துகிறார்.
  • ஒரு மூன்றாவது அணி ஆட்சிக்கு வரும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?
மூன்றாவது அணியில் யார் இருக்கிறார்கள்? முலாயம் சிங் யாதவை தவிர வேறு யார் இருக்கிறார்கள்? மாயவதி நிச்சயம் அவருடன் சேரமாட்டார். மம்மதா பானர்ஜி கம்யுனிஸ்ட்டுகளுடன் சேர மாட்டார். அது கடினமான ஒன்றாகத்தான் இருக்கப் போகிறது. மூன்றாவது அணி என்பது எப்போதுமே முரணான ஒன்றாகத்தான் இருக்கும்.
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இரண்டும் சேர்ந்து 276 இடங்களை விட அதிகம் கைப்பற்றும். எனவே அத்தகைய ஒரு ஏற்பாடு காங்கிரசின் ஆதரவுடனோ அல்லது பா.ஜ.கவின் ஆதரவுடன்தான் ஏற்பட முடியும். அப்படி இல்லாமல் வேறு ஒரு முன்னணியும் ஏற்படப் போவதில்லை. இல்லாவிட்டால் அரசாங்கமே கிடையாது. பா.ஜ.க அல்லது காங்கிரஸ் அரசாங்கத்தில் பங்குபற்றி அல்லது வெளியிலிருந்து ஆதரவு வழங்கினால், எப்படி அதை மூன்றாவது அணி என்று அழைக்க முடியும்.

வேர்க்கடலை, சீனி வகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களினால் சால்மோனெல்லா அபாயம்!

கனடா உணவுப்பரிசோதனை நிறுவனத்தினர் பருப்பு வகை சீனி வகைப் பொருட்களை உபயோகப்படுத்த வேண்டாமென கியுபெக்கிலும் ஒன்ராறியோவிலும் எச்சரிக்கை செய்துள்ளனர்.
சில வகையான வேர்க்கடலை, பாதாம், முந்திரி,எள் வெண்ணைகள் ஆகியவைகளும் எள்ளிலிருந்து செய்யப்படும் tahini என்பதனையும் சில சீனிப்பொருட்களையும் குறிப்பிட்டுள்ளனர்.
Tout Naturel, Yum Nature and Soeurs en Vrac ஆகிய பெயர்களுடன் விற்பனை செய்யப்பட்ட பொருட்களே எச்சர்க்கைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
Vicrossano Inc கு சொந்தமான சில திரளாக விற்கப்படும் பொருட்களும் அடங்குகின்றன.
இதுவரை எதுவித பாதிப்பும் அறியப்படவில்லையெனினும் மேற்படி பொருட்களின் ஆபத்தினாலேற்படும் அறிகுறிகள் பல தரப்பட்டவையாக இருக்குமென கூறப்படுகின்றது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறன், இலங்கை கொழும்புவில் மிகப் பிரமாண்டமான அளவில் விமான அலுவலக காம்ப்ளெக்ஸ்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறன், இலங்கை கொழும்புவில் மிகப் பிரமாண்டமான அளவில் விமான அலுவலக காம்ப்ளெக்ஸ் ஒன்றை கட்டிவருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கலாநிதி மாறன் குடும்பத்திற்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் உபயோகத்துக்காகவே இந்த காம்ப்ளெக்ஸ் கொழும்புவில் கட்டப்படுகிறது. இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிகட்டப் போரின் போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக கடந்த வாரம் இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறனின் பேச்சுக்கு அனைத்து தி.மு.க. உறுப்பினர்களும் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.

எம்.பி. தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், இலங்கை அரசுடன் freedom of the air, 4th freedom ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஸ்பைஸ்ஜெட் விமான போக்குவரத்து நடைபெறுகிறது.

இலங்கைக்கும் தமிழகத்துக்கம் இடையே விமானப் போக்குவரத்தை அதிகரிக்கும் முயற்சியில், ஸ்பைஸ்ஜெட் விமான அலுவலகம் கொழும்புவில் செயல்பட, பிரமாண்டமான கட்டிடம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஸ்பைஸ்ஜெட் டிக்கெட் விற்பனை, மற்றும் மார்க்கெட்டிங் நடைமுறைகள் கொழும்புவில் வொக்ஸ்ஹால் வீதியில் உள்ள ஜெட்விங் அலுவலகத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்றன. புதிய அலுவலக காம்ப்ளெக்ஸ் தயாரானதும், ஸ்பைஸ்ஜெட் சேல்ஸ் அன்டு மார்க்கெட்டிங் நடைமுறைகள் அங்கிருந்து நடைபெறும் என்று கூறப்படுகிறது.

ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ், இலங்கை கொழும்புவில் இருந்து 5th freedom (FOA) லேன்டிங் ரைட்ஸூக்காக விண்ணப்பம் செய்துள்ளது. அதன் அர்த்தம், கொழும்புவில் இருந்து பயணிகளை இந்தியாவுக்கு கொண்டுவராமல், மூன்றாவது நாடு ஒன்றுக்கு கொண்டு செல்ல முடியும்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸூக்கு 5th freedom (FOA) லேன்டிங் ரைட்ஸ், இந்தியாவில் உள்ளது. ஒரு பைலாட்ரல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதே லேன்டிங் ரைட்ஸை தமக்கும் கொடுக்குமாறு விண்ணப்பித்துள்ளது கலாநிதி மாறனின் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம்.

ரைட்ஸ் கொடுக்கும் முடிவு, இலங்கை அரசின் கைகளில் உள்ளது.

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (சி.இ.ஓ.) நீல் மில்ஸ், இதற்குமுன் துபாயில் எமிரேஸ்ஸூக்கு சொந்தமான ஃபிளை-துபாயின் சி.எஃப்.ஓ.வாக பணிபுரிந்தவர். இலங்கையின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸூம், எமிரேட்ஸின் ஒரு அங்கமாக இருந்தே தற்போது, அதிலிருந்து வெளியேறியுள்ளது.

அந்த வகையில், ஸ்பைஸ் ஜெட் சி.இ.ஓ. நீல் மில்ஸ், இலங்கை சிவில் ஏவியேஷன் துறையுடன் நெருக்கமானவர்.

தற்போது ஏர்-இந்தியாவுக்கு 5th freedom (FOA) லேன்டிங் ரைட்ஸ், லண்டன், நியூயார்க், மற்றும் சில ஏர்போர்ட்டுகளிலும், ஜெட் ஏர்வேஸூக்கு பிரசெல்ஸ், டொரண்டோ, நியூயார்க் ஆகிய ஏர்ப்போர்ட்டுகளிலும் உள்ளன. ஸ்பைஸ் ஜெட், கொழும்புவில் இந்த ரைட்ஸை பெற்றால், அதன் மிடில்-ஈஸ்ட் (சார்ஜா) ஆபரேஷன் தூள் கிளப்பும்.

இலங்கை
அரசு, கலாநிதி மாறனுக்கு சாதகமான முடிவை எடுக்கலாம் என்பதே தற்போதுள்ள நிலை.

1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 400 தொடக்கம் 600 பொலிஸார் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் கருணாவிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் - பிரட் அடம்ஸ்


இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள் கருணா அம்மான் என அழைக்கப்பட்டும் விநாயகமூர்த்தி முரளிதரனிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது யுத்த குற்ற விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் புலிகள் இயக்க அமைப்பினருடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருத்து வெளியிட்டிருந்தார்.
இது குறித்து இன்று (28) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய நாடுகளுக்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ், கருணாவின் கருத்தை வைத்துக் கொண்டு அவரை சுதந்திரமாக செயற்பட விட முடியாது என தெரிவித்துள்ளார்.
கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த போது, பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட ஒருவர் என்பதனால் இலங்கை அரசின் போர்க் குற்ற விசாரணை அவரிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என பிரட் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 400 தொடக்கம் 600 பொலிஸார் விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் சரணடைந்ததாகவும், அவர்களில் பலர் கருணாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த போது சித்திரவதை செய்யப்பட்டதாகவும் சிங்கள முஸ்லிம் பொலிஸர் கொலை செய்யப்பட்டதாகவும் மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
எனினும் பீபீசிக்கு பேட்டியளித்துள்ள கருணா, அந்த சம்பவங்களோடு தன்னை தொடர்பு படுத்தாமல் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் பிரட் அடம்ஸ் சுட்டிக் காட்டினார்.
1990ஆம் ஆண்டு 75 முஸ்லிம்கள் படுகொலை மற்றும் மட்டக்களப்பில் 200 பொதுமக்கள் படுகொலை என்பவற்றுடன் கருணா குழுவினர் தொடர்பு இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் சிறுவர்களை படையில் இணைத்துக் கொண்டதாக 2004ஆம் ஆண்டு மனித உரிமைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வீடு வீடாகச் சென்று சிறுவர்களை படையில் சேர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டமைக்கு கருணா முக்கிய பங்கு இருப்பதாகவும் இன்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் வடக்கு, கிழக்கில் குடும்பங்களை அச்சுறுத்தி, பாடசாலை செல்லும் சிறுவர்களை கடத்தியதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய பின்னரும் இலங்கை அரச படைகளுடன் இணைந்து குற்றச் செயல்களில் செயற்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்ட கருணா, இப்போது அரச வரப்பிரசாதங்களை அனுபவித்து வருவதாக பிரட் அடம்ஸ் குறிப்பிட்டார்.

ராஜபக்ஷ தலைமைக்கு எதிரானது ஜெனீவா பிரேரணை என்பன ;மங்கள சமரவீர

தமிழ்நாட்டில் இடம்பெறும் எதிர்ப்புகள் மற்றும் ஜெனீவா பிரேரணை என்பன இலங்கைக்கு எதிரானதல்ல எனவும் அது ராஜபக்ஷ தலைமைக்கு எதிரானது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  நீதி, நியாயத்தை சிறுதுளியேனும் பொருட்படுத்தாது ஆட்சி நடத்திச் செல்லும் ராஜபக்ஷ தலைமையின் ஊடல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து 2014ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மூன்றரைக் கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள அறத்தலாவ பிக்குகள் கொலை சித்திரத்தை பார்வையிட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சித்திரத்தில் புலிகள் பிக்குகளை தாக்கிய பகுதியை பார்வையிடவில்லை என அவர் நினைவுபடுத்தினார்.
அவ்வாறு அவர் பார்வையிடமால் விட்டமைக்கு காரணம் இம்முறை தேசத்திற்கு மகுடம் ஆரம்பித்து வைக்கச் சென்ற போது, ஜனாதிபதியை வரவேற்றது கருணா அம்மானும் பிள்ளையானும் என மங்கள சமரவீர சுட்டிக் காட்டினார்.
சிங்கள பெளத்தர்கள் என சொல்லிக் கொண்டு முஸ்லிம் மக்களுக்கு இடையூறு செய்வோர் பௌத்த குடிமகன்கள் அல்ல எனவும் அவர்கள் குண்டர் கும்பல்கள் எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இலங்கை பிக்குகளை தாக்கிய அதிதீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு தட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மங்கள சமரவீர இலங்கையில் பௌத்த அதி தீவிரவாதிகள் தண்டிக்கப்படவில்லை என கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

jeudi 28 mars 2013

தமிழர் சுவிட்சர்லாந்தில் தங்களின் அழகுராணியை தேடுறாங்கள்.

மிஸ் தமிழ் சுவிற்சர்லாந்து எனப்பெயராம் (அதாவது சுவிற்சர்லாந்து தமிழ் அழகுராணி எனலாம்) இந்த அழகுராணிப்போட்டியில் பங்குபற்றுபவர்களின் தாய் அல்லது தந்தை இலங்கையராவும் தமிழராகவும் இருக்க வேண்டுமாம். தமிழ் மொழியை சரளமாக பேசக்கூடியவராகவும் இருக்க வேண்டுமாம். வயது 16-25 வரையாம். இறுதி தெரிவு 27 ஏப்ரலில் இடம்பெறவுள்ளதாம்.

தமிழர் கலாச்சாரத்திற்கு புதியதான இக்கைங்கரியத்தினை முன்னெடுக்கின்ற அமைப்பின் நடாத்துனரான சிறிதரன் என்பவர் 20 மினுட்டன் பத்திரிகைக்கு தெரிவிக்கையில் „எங்களுடைய கலாச்சாரத்தில் பெண்களுக்கு இவ்வாறானதோர் சந்தர்ப்பம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அவர்களை வெளி உலகிற்கு கொண்டு வருவதற்காக நாங்கள் அவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் இந்த வாய்ப்பினை வழங்குகின்றோம்' எனக் கூறியுள்ளார். 

என் மனைவி சென்னையைச் சேர்ந்தவர். இது எனக்கு உணர்வுபூர்வமான தருணம்;முரளிதரன்


Muttiah-Muralitharanஇலங்கைக்கு எதிரான போராட்டம் வலுத்து வருவதன் காரணமாக சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருக்கு விளையாடும் சுழற்பந்து மேதை முத்தையா முரளிதரன் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளார். "இது கிரிக்கெட்டிற்கு வருத்தமான நாள். இது அரசின் முடிவு, அரசே எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியவில்லையெனில் நாங்கள் எச்சரிக்கையுடன் இருப்பதே நல்லது" என்று கூறியுள்ளார் முரளிதரன். ராயல் சாலஞ்சர்ஸ் அணி நிர்வாகத்திடம் பேசியுள்ளேன், சென்னையில் அல்லாத போட்டிகளில் நான் பங்கேற்க முடியும். என்று தனியார் தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ளார் முரளிதரன். "நான் 20 ஆண்டுகளாக இலங்கை அணிக்காக விளையாடியுள்ளேன், ஒரு தமிழனாக அங்கு எந்த வித பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. நான் பல பிரச்சனைகளை சந்தித்தபோது இலங்கை அரசும், கிரிக்கெட் வாரியமும் எனக்கு ஆதரவாகவே செயல்பட்டது. முன்பு போர்ச்சூழல் இருந்தது ஆனால் இப்போது இலஙைத் தமிழர்கள் அமைதியாகவே வாழ்கின்றனர். எனவே இந்திய அதிகாரிகள் இலங்கையில் நாங்கள் எப்படி வாழ்கிறோம் என்பதை வந்து பார்க்கவேண்டும். கடந்த காலத்தில் நடந்ததை மறக்கவேண்டும். இப்போது இன்னொரு போர்ச்சூழலை நாங்கள் விரும்பவில்லை. எங்களை அனுமதித்தால் நாங்கள் சென்னையில் விளையாடுவோம், சென்னை எனக்கு இரண்டாவது வீடு. என் மனைவி சென்னையைச் சேர்ந்தவர். இது எனக்கு உணர்வுபூர்வமான தருணம். நாங்கள் அரசியலில் ஈடுபடவிரும்பவில்லை. ரசிகர்களுக்காக நாங்கள் கிரிக்கெட் ஆடுகிறோம். இவ்வாறு கூறினார் முத்தையா முரளிதரன். இவர் 5 ஐ.பி.எல். சீசன்களிலும் விளையாடியுள்ளார். 2008 - 10 -இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடினார். பிறகு 2011-இல் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு விளையாடினார். 2012ஆம் ஆண்டு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு விளையாடினார்.

தமிழத்திற்கு வந்து விளையாடுவதை நாம் தடுக்க முடியாது;சுப்பிரமணியம் சாமி.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள், தமிழத்திற்கு வந்து விளையாடுவதை நாம் தடுக்க முடியாது. உடனடியாக தமிழக அரசை விலக்க வேண்டும். சென்னையை பதற்றப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி.

குறிப்பாக இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சிறப்பு ஆயுதப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து போட்டிகளை நடத்தி இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் சென்னையை பதற்றப் பகுதியாக அறிவிக்க வேண்டும். மேலும் அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி ஜெயலலிதா அரசை ஜனாதிபதி விலக்கலாம் என சாமி. அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை கோரியும், தனி ஈழம் தேவையா என்பது குறித்து இலங்கைத் தமிழர்களிடையேயும், புலம்பெயர் தமிழர்களிடையேயும் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த ஐ.நா மன்ற பாதுகாப்புக் கவுன்சிலை வலியுறுத்தியும், இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று புதன் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், தனி ஈழம் குறித்து இலங்கை வாழ்த் தமிழர்களிடமும், புலம்பெயர்ந்தோரிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் எனவும் இன்றைய தீர்மானம் வலியுறுத்துகிறது.

முன்னதாக இலங்கைத் தமிழர் பிரச்சனை மற்றும் அதன் தொடர்பான மாணவர் போராட்டம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் முன்மொழியப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இலங்கையின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்தும் பேசினர்.

திமுக மீது ஜெயலலிதா சாடல்

திமுக இரட்டை வேடம் என ஜெயலலிதா குற்றச்சாட்டு.
விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசுகையில் முதல்வர் ஜெயலலிதா திமுக இப்பிரச்சினையில் இரட்டைவேடம் போடுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

டெசோ அமைப்பிற்கு புத்துயிரூட்டியுள்ள கருணாநிதி, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று கூறும் அவர், அவரது தமக்கை மகன் மறைந்த முரசொலி மாறன் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் சன் குழுமத்திற்குச் சொந்தமான ஐபிஎல் அணி, சன் ரைசர்ஸில், இலங்கை வீரர்கள் இடம் பெற்றிருப்பது குறித்து மௌனம் சாதிக்கிறார் என்றார்.

ஆனால் தான் எப்போதுமே உறுதியானதொரு நிலைப்பாட்டை எடுத்துவருவதாகக்கூறிய அவர், இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதைத் தடுத்து நிறுத்தியதையும், இந்தியாவில் எங்குமே அவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்று இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்தியதையும், இலங்கையர் தமிழ்நாட்டில் நடைபெறும் எந்த விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டதையும், இலங்கை பங்கேற்கும் ஆசிய தடகளப் போட்டிகள் தமிழகத்தில் நடத்த அனுமதி மறுத்ததையும் நினைவு கூர்ந்தார்.

அவ்வாறான தனது நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் விதமாகத்தான் மாணவ-மாணவியரின் போராட்டம் அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே மாணவர் போராட்டங்கள் ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளன.

ஜெயலலிதா இலங்கையில் உள்ள 8 லட்சத்து, 42 ஆயிரத்து 323 இந்திய தமிழர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்

இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு லக்பல சேனா அமைப்பின் தலைவர் மருத்துவர் சுதத் மல்லிக்காராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வருக்கு கச்சத்தீவு மீண்டும் பெற்றுக்கொள்ளும் தேவை ஏற்பட்டிருக்குமாயின் அதனை மீண்டும் பெற்றுக் கொள்ளட்டும்.
ஆனால், இலங்கையில் உள்ள 8 லட்சத்து, 42 ஆயிரத்து 323 இந்திய தமிழர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என அந்த அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.
இந்திய அரசாங்கம் இதற்கு விருப்பம் தெரிவித்தால், தாமதமின்றி, அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளட்டும்
தேயிலை தோட்டங்களில் வேலைக்கு ஆட்கள் தேவையாக இருந்தால், தென் சீனாவின் யுவான் மாகாணத்தில் அல்லது வியட்நாம் அல்லது லாவேஸ் ஆகிய நாடுகளில் ஒன்றில் இருந்து பௌத்த மதத்தை சேர்ந்த யுவதிகளை இலங்கை அழைத்து வருமாறும் மல்லிக்காராச்சி மேலும் கூறியுள்ளார்.

mercredi 27 mars 2013

சர்வதேச சமுக‌ பாதுகாப்பு அமைப்பு போன்ற போராட்ட‌ங்கள் காரணமாக‌ பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்தனர்.;



யுத்த காலத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் சில நாடுகளின் தலைமைத்துவம் வரையில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தக்கூடியவர்களாக இருந்ததாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தம் இடம்பெற்ற போது மனிதாபிமான நடவடிக்கையை நிறுத்துமாறு கோரி பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்தனர்.
குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினது பிரத்தியேக செயலாளர் போன்றோரும் இலங்கைக்கு விஜயம் செய்தனர்.
அவர்கள் யுத்தத்தை நிறுத்த வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.
அத்துடன் சில நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கவும் இறுதி நேரத்தில் மறுத்தன.
இதுவே சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் நெருங்கிய உறவை பேண வழிசமைத்ததாகவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் போன்ற நாடுகளின் நடு நிலையாலர்களீன் சர்வதேச சமுக‌ பாதுகாப்பு அமைப்பு போன்ற அமைப்புக்கள் போராட்ட‌ங்கள் காரணமாக அவர்கள் அளூத்த‌ங்கள் காரணமாக  பிரான்ஸ்.பிரித்தானியா,வெளியுறவுத்துறை அமைச்சர்கள், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினது பிரத்தியேக செயலாளர் போன்றோரும் இலங்கைக்கு விஜயம் செய்தனர்.என்பதும் குறீப்பீடதக்கதது

ரகசிய பேச்சுவார்த்தை காலியில் ரணில், சந்திரிகா, மங்கள ஆகியோர்

காலியில் உள்ள பிரபல விடுதியொன்றில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோர் வெளிநாட்டவர்களுடன் இணைந்து ரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 23 ஆம் திகதி குறித்த விடுதிக்கு சென்ற இவர்கள் நீண்ட கலந்துரையாடலை நடத்தியுள்ளதுடன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த பேச்சுவார்த்தையில் 25 வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது

mardi 26 mars 2013

இலங்கையில் 4500 ஆண்டுகளுக்கு முன்னர் மனித இனங்கள்

இலங்கையின் மலையக பகுதிகளில் 4500 வருடங்களுக்கு முன்னதாகவே மனித இனங்கள் வாழ்ந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இலங்கை புராதான ஆய்வு திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஹப்புத்தளை, ஹல்தமுல்லை, பெரகல போன்ற போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வராய்ச்சிகளில் 4500 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு மனித இனம் வாழ்ந்தமைக்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள், ஆயுதங்கள் போன்றன இந்த பகுதிகளில் மீட்கப்பட்டன. அத்துடன் பல்வேறு கல்லறைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒருபால் திருமண சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி; பிரான்ஸில்

Homo Sex
ஒருபால் திருமணம் மற்றும் குழந்தைகளை தத்தெடுக்கும் சட்டமூலத்தை தடுக்கும் கடைசி முயற்சியாக ஆயிரக்கணக்கானோர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பேரணி நடத்தியுள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பேரணி கலவரமாக மாறியதை அடுத்து பொலிஸார் தடியடி மேற்கொண்டதோடு கண்ணீர் புகைப் பிரயோகமும் மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குச் செல்லும் சாப்ஸ் எலிசீஸ் வீதிக்கு நுழைய முயன்றபோதே பொலிஸாருடன் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது பலர் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஒருபால் திருமணத்தை அங்கீகரிப்பது மற்றும் அவர்கள் குழந்தை தத்தெடுப்பதை ஏற்பது தொடர்பான சட்ட மூலம் பிரான்ஸ் பாராளுமன்ற கீழவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலம் அடுத்த மாதம் பிரான்ஸ் செனட் சபையில் விவாதிக்கப்படவுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயில் ஹொல்லன்டேவின் சோசலிஸா கட்சிக்கு பாராளுமன்ற இரு அவைகளிலும் பெரும்பான்மை ஆதரவு உள்ளது.
கருத்துக் கணிப்பு வாக்கெடுப் புகளிலும் ஒருபால் திருமணத்திற்கு பிரான்ஸில் தொடர்ந்து ஆதரவு உள்ளது. எனினும் அண்மைக்காலமாக அதில் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் செயற்பட்டாளர்கள், ஓய்வு பெற்றோர், மதக்குருக்கள் உட்பட சுமார் 300,000 பேரளவில் பங்கேற்றிருந்ததாக பொலிஸ் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.

மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல த.தே.கூ.வினர் : ஆனந்த சங்கரி

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல. ஏனெனில் கூட்டமைப்பினர் வட மாகாணத்தில் 63 ஆயிரம் வாக்குகள் பெற்றபோது சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்து 13 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார். அவ்வாறு இருக்கையில் த.தே.கூ.வினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளா?' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி கேள்வி எழுப்பினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு விடயத்தில் உள்ள இழுபறி நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த ஆனந்த சங்கரி, 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சிகளும் என்ன நடந்தாலும் ஒற்றுமையை சீர்குலைக்க கூடாது என்றும் அக்கட்சிகள் கூட்டமைப்பில் அர்ப்பணிப்போடு செயற்படுவதாகவும்' சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் கூறுகையில், 'கூட்டமைப்பாக பதிவு செய்வதில் தமிழரசுக் கட்சிக்கு எண்ணமில்லை. அவர்கள் எம்மீது சவாரி செய்யவே பார்க்கின்றனர். கூட்டமைப்பு உடையாதிருப்பதற்கு எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயார் என சம்பந்தர் கூறியிருந்த போதிலும், அவர் இரண்டு வருடங்களாக இதனையே தெரிவித்து வருகின்றார். ஆனால் நாம் சப்பரத்தில் வைத்து அவரை காவவேண்டி உள்ளது.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய கட்சிகள் என்ன நடந்தாலும் ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடாது என்பதற்காக அர்ப்பணிப்போடு செயற்படுகின்றன' என்றார்.
முன்னர் வெளிநாட்டு இராஜதந்திரிகள் எவர் வந்தாலும் நான் சந்திப்பது வழக்கம். ஆனால் தற்போது நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதால் என்னை அழைப்பதில்லை. அதனால் கடந்த இரண்டு வருடங்களாக எந்த தூதுவரையோ இராஜதந்திரியையோ நான் சந்திக்கவில்லை.
எனக்கு அரசியல் பேசத்தெரியாது என்கின்றனர் சிலர். ஆனால் பட்டினியில் மக்கள் இறந்தபோது நான் அதனை ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியிருந்தேன். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அது மட்டுமல்ல. மக்களை காப்பாற்றுங்கள் என ஜனாதிபதிக்கும் பிரபாகரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் அதனை கருத்தில் எடுக்கவில்லை' என்றார்.
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான எம்மிடையே இழுபறிநிலை ஏற்பட்டுள்ளதே என மக்கள் கவலை வெளியிடுகின்றனர் எனக் கேட்டபோது அதற்கு பதிலளித்த சங்கரி, 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏக பிரதிநிதிகள் அல்ல. ஏனெனில் கூட்டமைப்பினர் வட மாகாணத்தில் 63 ஆயிரம் வாக்குகள் பெற்றபோது சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்து 13 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார். அவ்வாறு இருக்கையில் இவர்கள் ஏகபிரதிநிதிகளா?
ஆனால் சிலர் தேவையின் நிமித்தம் அந்த நிலைப்பாட்டை எடுத்தபோது நான் அதனை எதிர்க்கவில்லை. தமிழகத்தில் ஒற்றுமை வலுப்பெற்றிருக்கும்போது அதனை சீர்குலைக்கக் கூடாது என்பதனால் நான் வாயை மூடிக்கொண்டுள்ளேன். எத்தனையோ அவமானங்களை தாங்கிக்கொண்டு இருப்பதற்கு காரணம் நல்லெண்ணமேயாகும். ஆனால் அந்த எண்ணத்துடன் தமிழரசுக் கட்சி செயற்படவில்லை. அவர்கள் அடுத்த வருட இருப்பை சீர்செய்வதற்கே செயற்படுகின்றனர்.
பொய்யிலேதான் இந்த கூட்டமைப்பு ஓடுகின்றது. உண்மையோ நேர்மையோ கிடையாது. எனவே இவர்களுடன் வேலை செய்வது கடினமானது. எனினும் நான் குழப்பமாட்டேன்' என்று அவர் கூறினார். 'தமிழரசுக் கட்சியினர் வெளிநாடுகளில் இருந்து பணம் சேர்த்தார்கள். ஆனால் அதில் என்ன செய்கின்றனர் என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் பணம் சேர்க்கும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு என்றே கூறப்படுகின்றது.
ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சொல்லியிருந்தார் தான் மூன்று மாதம் வெளிநாட்டில் போய் வேலை செய்ததாக. தொடர்ந்து 3 கிழமைகள் நின்றதாக உறுதிப்படுத்தினால் அடிமைச் சுவடி எழுத்திக்கொடுக்க தயாராக உள்ளேன். ஆனால் அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக எண்ணி மக்கள் ஏமாறுகின்றனர். அவர்களுடைய வாயில் இருந்து வருவதெல்லாம் 75 வீதம் பொய்யாகும். அதனை நான் ஆதாரத்துடன் நிரூபிப்பேன். ஆனால் மக்களுடைய போராட்டத்தை பலவீனப்படுத்தக்கூடாது என்பதற்காக நாங்கள் சில விடயங்களை மறுக்காமல் மௌனம் சாதித்து வருகின்றோம்.
கிளிநொச்சிக்கு என்னுடன் வந்து பாருங்கள் எங்கு பசி இருக்கின்றது, எங்கு பட்டினி இருக்கின்றது என்பதை காட்டுகின்றேன். அத்துடன் எத்தனை பேர் கண், கால், கை இல்லாது என்னிடம் வந்து தமக்கு உதவி எதுவும் இல்லை பசிக்கின்றது என்று கூறுகின்றனர் என்பதை காண்பிக்கின்றேன். வருகின்ற 10 பேரில் 8 பேர் பொய் சொன்னாலும் கூட 2 பேர் அவ்வாறு உருவாகுவதற்கு காரணம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தான். ஆனால் இவர்கள் எப்போதாவது மக்களுக்கு வீடில்லாததை பற்றியோ அல்லது அவர்களுக்கு நட்டஈடு கொடுப்பதைப்பற்றியோ நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி பெரிய பிரச்சினையை கிளப்பி இருக்கின்றனரா?' எனவும் ஆனந்த சங்கரி கேள்வி எழுப்பினார்.

கடற்கொள்ளையர்களை போன்று அரசாங்கம் செயற்படுகின்றது : கயந்த கருணாதிலக

அரசாங்கம் கடற்கொள்ளையில் ஈடுபடும் சோமாலிய கடற்கொள்ளையர்களைப் போல் நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடிக்கின்றதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி நாட்டு மக்களின் மீது வாழ்க்கைச் சுமையை அதிகரித்த நிலையில் எதிர்வரும் ஏப்பிரல் மாதமளவில் பஸ் கட்டண அதிகரிப்பு இடம்பெறவுள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் விலைவாசிகளை அதிகரித்து மக்களின் பணத்தை அரசு கொள்ளையடிக்கின்றது.
யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையிலும் மக்கள் பசிக்கும் கஷ்ட துன்பத்திற்கும் முகங்கொடுத்துக் கொண்டேயுள்ளனர். அரசாங்கம் புதுப்புது வசனங்களைக் கூறி மக்களை ஏமாற்றி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுவருகின்றதென அவர் மேலும் தெரிவித்தார்.

திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

’ஈழத்தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலை உருவானதால், மத்திய அமைச்சரவையில் இருந்தும், கூட்டணியில் இருந்தும் திமுக விலகியது. இதை செயற்குழு முழுமையாக ஏற்கிறது. ஈழத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதற்கான தீர்மானத்தை இந்தியா ஐநா மனித உரிமை ஆணையத்துக்கு எடுத்து சென்று நிறைவேற்ற வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் நடைபெறும் அறப்போராட்டத்தை ஒடுக்க கல்லூரிகளை மூடுவதையும், காவல் துறை மூலம் போராட்டம் ஒடுக்கப்படுவதையும் செயற்குழு கண்டிக்கிறது.
 தமிழக மீனவர்களை பாதுகாக்க வலிமையான நடவடிக்கையை மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும்.
இனப்படுகொலை நடத்திய இலங்கையில் நவம்பர் மாதம் காமன்வெல்த் மாநாடு நடக்க உள்ளது. இதை இந்தியா புறக்கணிக்க வேண்டும்.
ஜனநாயக நெறிகளுக்கு புறம்பாக நடைபெறும் கூட்டுறவு சங்க தேர்தலில் திமுக பங்கேற்காது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டு, மக்கள் பாதுகாப்பின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கிய ஜெயலலிதா அரசை வன்மையாக கூட்டம் கண்டிக்கிறது.
தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி நடுவர் மன்றம் உருவாக, இறுதி தீர்ப்பு கிடைக்க, காவிரி நதிநீர் ஆணைய கண்காணிப்பு குழு அமைக்க, தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியாக திமுக தலைவர் கருணாநிதியின் முயற்சியே காரணம் என்பதால் அவருக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் மிக மோசமான மின் தட்டுப்பாடு நிலவுவதை பற்றி கவலைப்படாத ஜெயலலிதா அரசுக்கு செயற்குழு கண்டனம் தெரிவிக்கிறது. கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தவறினால் திமுக விவசாய அணி சார்பில் போராட்டம் நடத்தப் படும். தமிழகத்துக்கு கிடைத்த பல்வேறு மகத்தான திட்டங்களில் சேது சமுத்திர திட்டத்தையும் மதுரவாயல் & துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தையும் அதிமுக அரசின் ஒத்துழைப்பு இல்லாமையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை செயற்குழு கண்டிக்கிறது.’’
மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

dimanche 24 mars 2013

ஒரு போராட்டம் என்பது இவ்வளவு மட்டும்தானா? முக்கியமாக, இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்ன அதாவது இந்தப் போராட்டம் அடையப்போகும் இலக்கு என்ன?

ஈழத் தமிழர் நலனை முன்னிறுத்தி தமிழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் உத்வேகம் அளிக்கிறது. இப்படி ஒரு போராட்டச் சூழலை தமிழகம் சந்தித்து எவ்வளவு காலம் இருக்கும்? அரசியல் ஒரு சாக்கடை; அது நமக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லி, பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட ஒரு தலைமுறையிடமிருந்து வெளிப்படும் இந்தத் தார்மிகக் கோபமும்  தன்னெழுச்சியும் அது வெளிப்படும் அறவழியும் கொண்டாடப்பட வேண்டியவை.
 ஆனால், ஒரு போராட்டம் என்பது இவ்வளவு மட்டும்தானா? முக்கியமாக, இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்ன அதாவது இந்தப் போராட்டம் அடையப்போகும் இலக்கு என்ன?
 நாம் வாழும் காலத்தின் தன்னிகரற்ற போராளியான இரோம் ஷர்மிளா ஒரு போராட்டத்துக்கான தேவையாகக் குறிப்பிடுவது இவை: ஒரு பெரிய போராட்டத்துக்கான தேவை... தீவிரம், உறுதி, சுயநலமற்ற நீடிப்புத்தன்மை, நேர்மையான தொலைநோக்கு.
 மேலும் ஒரு விஷயத்தையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கள யதார்த்தத்தின் அடிப்படையிலான சித்தாந்தம்!
 கடந்த இரு ஆண்டுகளில் உலகம் சந்தித்த சில முக்கியமான போராட்டங்களையும் அவற்றின் இன்றைய விளைவுகளையும் எண்ணிப் பாருங்கள்.
 துனிஷியாவில் ஜைனுல் ஆபிதீன் பென் அலி; எகிப்தில் ஹோஸ்னி முபாரக்;   லிபியாவின் மம்மர் கடாபி ஆகியோரை எதிர்த்து நடந்த போராட்டங்களை நாம் எவ்வளவோ உத்வேகத்தோடு பார்த்தோம். இன்றைக்கு அங்கு நடப்பது என்ன? அண்ணா ஹசாரேவுக்குக் கூடிய கூட்டம் இப்போது எங்கே போனது? ஹியூகோ சாவேஸின் மரணத்துக்குப் பின் வெனிசுலாவின் எதிர்காலம் என்னவாகும்?
 இவை எல்லாம் உணர்த்தக்கூடிய முக்கியமான ஒரு விஷயம் உண்டு. எதிர்ப்பும் தன்னெழுச்சியும் தனிநபர் ஆளுமையும் மட்டுமே ஒரு போராட்டத்தின் இலக்கை அடையப் போதுமானவை அல்ல என்பதுதான் அது. போராட்டம் தனது இலக்கை எட்ட சித்தாந்தம் வேண்டும். அதிலும், கள யதார்த்த அடிப்படையிலான சித்தாந்தம் வேண்டும்.
  தமிழகத்தில் மாணவர்கள் மகத்தான தன்னெழுச்சியுடன் போராடுகிறார்கள், சரி. இந்தப் போராட்டத்தின் தலையாய கோரிக்கைகள் என்னென்ன?
 1. இலங்கை நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பாக அதிபர் ராஜபட்ச தண்டிக்கப்பட வேண்டும். இதற்கான சர்வதேச விசாரணை நடத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. ஈழத் தமிழ் மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தனித்தமிழீழம் வேண்டும்.
  தமிழகத்துக்குத் தனி வெளியுறவுத் துறை வேண்டும் என்பது உள்பட இன்னும் இன்னும் ஏராளமான கோரிக்கைகள் இருக்கின்றன.
  இவை எல்லாம் யாரை நோக்கி விடுக்கப்படும் கோரிக்கைகள் தெரியுமா? இந்திய அரசை நோக்கி. அதாவது, எந்த அரசு ஈழப் போரைப் பின்னின்று இயக்கியது என்று இவர்களால்  குற்றம்சாட்டப்படுகிறதோ, அந்த அரசை நோக்கி!
 சர்வதேச விசாரணை என்று நாம் யாரை மனதில் வைத்துக் கேட்கிறோம்? அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளை. அதாவது, எந்த நாடுகள் எல்லாம் ஈழப் படுகொலையின் பின்னணிச் சதியில் பங்கு வகித்தனவோ, அந்த நாடுகள் விசாரணை நடத்தி, நீதி வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எனில், நம்முடைய கோரிக்கைகள் எந்த அளவுக்குக் கள யதார்த்தத்துடன் பொருந்துபவை?
  இவை எல்லாம் எந்த அளவுக்கு ஈழத்தில் வாழும் தமிழர்களின் இன்றைய பிரச்னைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டவை?
 போரில் உறவுகளையும் வாழ்வாதாரத்தையும் பறிகொடுத்துவிட்ட நிலையில், மறுவாழ்வுக்கென உருப்படியாக எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்காத சூழலில், வேலைவாய்ப்பின்மையால் சூழும் வறுமைதான் ஈழத் தமிழர்களின் இன்றைய தலையாயப்   பிரச்னை. போருக்குப் பின்னரும் வீதிக்கு வீதி நிற்கும் ராணுவமும், திட்டமிட்டு நடத்தப்படக்கூடிய சிங்களமயமாக்கமும்தான் அவர்கள் இன்றைக்கு எதிர்கொள்ளும் பெரும் அரசியல் நெருக்கடிகள். ஈழத் தமிழர்கள் நலனில் நாம் உண்மையாகவே அக்கறை காட்டுகிறோம் என்றால், நாம் பணிகளைத் தொடங்க வேண்டிய இடம் இதுதான்.
 முதலாவது, அவர்கள் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள், இரண்டாவது ராணுவமயமாக்கலை உடைப்பதற்கான நடவடிக்கைகள், மூன்றாவது சிங்களமயமாக்கலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்... இந்த வரிசையின் கடைசி கட்டத்தில்தான் தமிழீழத்துக்கான நடவடிக்கைகள் அமையலாமே தவிர, முதலாவதாக அல்ல.
 அதையும்கூட முன்னெடுப்பது நாமாகவோ, சர்வதேச நாடுகளாகவோ இருக்க முடியாது. ஈழத் தமிழ் மக்கள்தான் முன்னெடுக்க வேண்டும்.
 நாம் இப்படி யோசித்துப் பார்ப்போம். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான காலகட்டத்தில் காந்திஜி, நேருஜி, நேதாஜி உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் அகற்றப்பட்டு, போராட்டம் முழுமையாக வெள்ளையரால் ஒடுக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அத்தகைய சூழலில், அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ இந்தியச் சுதந்திரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இந்தியா சுதந்திரம் அடைவது சாத்தியம்தானா?
  ஒரு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால், எந்த மக்களுக்காக அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறதோ, அந்த மக்களின் அன்றாட வாழ்வில் அந்தப் போராட்டத்துக்கான நெருக்கடியும் தேவையும் இருக்க வேண்டும். போராட்டத்தின் தேவை - தீர்வு குறித்த தெளிவு அந்த மக்களிடத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். முக்கியமாக, சம்பந்தப்பட்ட மக்களின் கையில் அந்தப் போராட்டம் இருக்க வேண்டும்.
 சமகாலத்தில், இதற்குச் சரியான உதாரணம், கூடங்குளம் மக்களின் போரட்டம். கூடங்குளப் போராட்டத்தில் பங்கேற்கும் ஒரு பள்ளிச் சிறுமியிடம் கேட்டுப்பாருங்கள்... தான் எதற்காகப் போராடுகிறாள், தன்னுடைய கோரிக்கைகள் என்ன, அவற்றின் சாத்தியம் என்ன, இந்தப் பிரச்னைக்கான தீர்வு என்ன? தான் செல்ல வேண்டிய தொலைவு எவ்வளவு என்கிற ஒவ்வொரு கேள்விக்கும் பதில் வைத்திருப்பாள்.
  இந்தியா எல்லா அணு உலைகளையும் மூட வேண்டும். உலகம் அணு சக்திக்கு விடை கொடுக்க வேண்டும். இது கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் கடைசி வரிசையில் இருக்கக்கூடிய கோரிக்கை. அப்படி என்றால், முதல் வரிசையில் இருக்கும் கோரிக்கைகள்  என்ன? கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும்; மூடும் வரை எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்; தற்காப்புப் பயிற்சி அளிக்க வேண்டும் - இதுதான் கள யதார்த்த அடிப்படையிலான போராட்டம். இந்த அணுகுமுறையுடன் ஒத்துப்போகும் சித்தாந்தமும் நீடித்த தன்மையும் சேரும்போதுதான் காலம் அதற்குத் தக்க பதிலைச் சொல்லும்.
  இந்தியாவில் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் ஈழப் போர் ஒரு பெரும் குற்றவுணர்வை உருவாக்கி இருக்கிறது. இயலாமையும் அரசியல் கையாலாகாத்தன்மையும் சேர்த்து உருவாக்கிய குற்றவுணர்வு அது. வெறுமனே ஒழிக கோஷம் போடுவதால் மட்டும் அந்தக் குற்றவுணர்விலிருந்து நாம் வெளிப்பட்டுவிட முடியாது.
 இன்னும் ஒருபடி மேலே போய், தமிழகம் வரும் சிங்களர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் சூழலை மேலும் நாசப்படுத்தக் கூடியவை.
 இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்த நேரம். நாசகார ஆயுதங்கள் சூழ பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்தின் பிடியில் சிக்கியிருந்த சூழலில், கொழும்பில் தங்களுடைய இறுதி வான் தாக்குதலை நடத்தினர் விடுதலைப் புலிகள். அல்-கொய்தாவின் நியூயார்க் வான் தாக்குதலை முன்மாதிரியாகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் அது.
  இலங்கை ராணுவம் சுதாரித்துக்கொண்ட நிலையில், புலிகளின் இரு விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட பெரிய சேதம் இன்றி தோல்வியில் முடிந்தது அந்தத் தாக்குதல்.
 ஒருவேளை புலிகள் கணக்குப்படி அந்தத் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால், அதிகபட்சம் ஐந்நூறு அறுநூறு சிங்களர்கள் செத்திருக்கலாம். ஆனால், பதிலுக்குத் தமிழர்கள் இன்னும் எத்தனை ஆயிரம் உயிர்களைக் கூடுதலாகக் கொடுக்க வேண்டி இருந்திருக்கும்? புலிகளிடம் அன்று வெளிப்பட்ட அதே தவறான ராஜதந்திரம்தான் இன்றைக்குத் தமிழகம் வரும் சிங்களர்களைக் குறிவைத்துத் தாக்குவோரிடமும் வெளிப்படுகிறது.
 அன்றைக்குப் புலிகளின் மனதை ஆக்கிரமித்தது சாகச மனோபாவம் என்றால், இன்றைக்கு  வன்முறையில் இறங்கும் ஈழ ஆதரவாளர்களை ஆக்கிரமிப்பது கும்பல் மனோபாவம்.
  இனவெறிக்கு எதிராக நாம் களம் இறங்குவதாகச் சொல்கிறோம். ஆனால், அதே இனவெறியைத்தான் நாம் வெளிப்படுத்துகிறோம். இலங்கையில் வாழும் தமிழர்களிடையே பதற்றத்தை உருவாக்குவதோடு மட்டும் இல்லாமல், போருக்குப் பின் மெல்ல இன அடிப்படைவாதப் போட்டியிலிருந்து விலகி, வேறு திசை நோக்கி நகர ஆரம்பித்திருக்கும் இலங்கை அரசியலை மீண்டும் இன அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளவும் இது வழிவகுக்கும்.
  இன்னும் இந்தியாவுக்குள்ளேயே நம்முடைய நிலைப்பாட்டை எதிர்க்கும் ஏனைய மாநிலத்தவர்கள் மீது நாம் வெளிப்படுத்தும் ஆத்திரம் ஈழத் தமிழர்களை அன்னியப்படுத்தவே செய்யும். மேலும், காஷ்மீர் பிரச்னைக்காகவோ, மணிப்பூர் பிரச்னைக்காகவோ நம்மில் எத்தனை பேர் போராடியிருக்கிறோம்... கைமாறு எதிர்பார்க்க?
 ஈழப் போரின் பின்னணி ஒரு சர்வதேச சதி. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா... எந்த ஓர் நாடும் இனி ஒருபோதும் ஈழ விடுதலைக்கு உதவாது.
 இன்றைக்கு ஈழத் தமிழர்களின் உடனடித் தேவை பொருளாதார மீட்சியும் ராணுவமயமாக்கலிலிருந்து விடுவிப்பும். இலங்கை அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நாம் உணர்த்த வேண்டிய முதல் உண்மை தமிழர்கள் நலனின்றி இலங்கையில் அமைதி சாத்தியம் இல்லை என்பதை.
 ஈழத் தமிழர்கள் நலன் சார்ந்த நம்முடைய எந்தப் போராட்டமும் இந்தக் கள யதார்த்தச் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொண்டே தொடங்க வேண்டும். வெளிநாடுவாழ் ஈழத்தமிழர்களின் மன ஆறுதலுக்காகவோ, தமிழக அரசியல் கட்சிகளின் குற்றஉணர்வை மறைப்பதற்காகவோ நாம் போராடுவதால், யாருக்கு என்ன பயன்? ஈழத்தில் வாழும் தமிழர்களின் சுதந்திரமும், நல்வாழ்வும், எதிர்காலமும், இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் மலர இருக்கும் தமிழ் ஈழமும்தான் நமது இலக்காக இருக்க வேண்டும்!

அச்சுறுத்த முடியாது அமெரிக்கத் தீர்மானம் மூலம் எங்களை

அமெரிக்கத் தீர்மானம் மூலம் எங்களை அச்சுறுத்த முடியாது என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் அமைந்துள்ள குருனேகாலா மாவட்ட ராணுவத் தலைமையகத்தில் அவர் பேசியது:
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம், எங்கள் மீதான தாக்குலாகும். இத்தாக்குதல், எங்களை ஆச்சரியப்படுத்தவில்லை. இந்தத் தாக்குதல்களால் எங்களை அடக்கவோ, தோற்கடிக்கவோ, அச்சுறுத்தவோ முடியாது. விடுதலைப்புலிகளின் பிரிவினைவாதப் போரை ஒடுக்குவதற்காக ராணுவத்துக்கு தலைமை தாங்கி நான் வழிநடத்தினேன். அப்போது, வெளிநாடுகளில் வாழும் விடுதலைப்புலி ஆதரவாளர்களிடம் இருந்தும், இலங்கைக்கு எதிரான சக்திகளிடம் இருந்தும் இது போன்ற தாக்குதல்களை எதிர்பார்த்தேன்.
எனது அரசு மீதான எல்லா குற்றச்சாட்டுகளும் தவறான குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி உள்நோக்கம் கொண்டவையாகும். நார்வே ஆதரவிலான போர் நிறுத்தம் 2008இல் முடிவுக்கு வந்தது. 2009ஆம் ஆண்டுக்கு முன்பு இந்த நாட்டின் ஒரு பகுதி ஈழப்பகுதி என்று அடையாளம் காணப்பட்டது. அதற்கு போர் நிறுத்த ஒப்பந்தமானது சிறிது அங்கீகாரமும் அளித்தது.
சர்வதேச சமூகத்தினரால் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்தத்தை நாம் ரத்து செய்திருக்காவிட்டால், இன்றுள்ள நிலைமை எப்படி உருவாகியிருக்கும்? என்றார் ராஜபட்ச.

நிபந்தனையின்றி இந்த தீர்மானத்தை எதிர்த்து இருக்க வேண்டும்;சுப்பிரமணியம் சாமி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை இலங்கைக்கு கிடைத்த வெற்றியாகும் என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சாமி தெரிவித்துள்ளார். அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தொடர்பில் இந்தியா தெளிவான முடிவை எடுக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது; இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிபந்தனையின்றி ஆதரித்து இருக்க வேண்டும். இல்லையேல் நிபந்தனையின்றி இந்த தீர்மானத்தை எதிர்த்து இருக்க வேண்டும்.
அப்படி செய்து இருந்தால், உலக நாடுகள் இந்தியாவை பாராட்டியிருக்கும். இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்று எந்த ஒரு நாடும் கூறவில்லை.
எனவே அமெரிக்கா கொண்டுவந்த இந்த தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு மறைமுக வெற்றியே கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

வரிகொடா இயக்கம்;தமிழ்நாட்டில் இருந்து செல்லும் வரியை தடுப்பதே தங்களின் அடுத்த கட்ட போராட்டம்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராடும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்கள் அடுத்த கட்டமாக இந்திய அரசுக்கான வரிகொடா இயக்கம் நடத்தப்போவதாக தெரிவித்தார் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த லயோலா கல்லூரி மாணவர் ஷண்முகப்பிரியன் என்கிற செம்பியன். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் தழுவிய அளவில் மாணவர்கள் பலரும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததைத் தொடர்ந்து அனைத்துக் கல்லூரிகளையும் மூடும்படி மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச்.25,2013) முதல் இந்த கல்லூரிகளை மீண்டும் திறக்க மாநில அரசு முயற்சிகளை முன்னெடுத்துவருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் பின்னணியில், தமிழக மாணவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று போராடும் மாணவர்களுக்கான அமைப்பாக உருவாகியிருக்கும் அமைப்புக்களில் ஒன்றான தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த லயோலா கல்லூரி மாணவர் ஷண்முகப்பிரியன் என்கிற செம்பியன் அளித்த செவ்வியில் விளக்கினார்.
போராடும் தமிழக மாணவர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் புறக்கணித்த இந்திய நடுவணரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் வரியை தடுப்பதே தங்களின் அடுத்த கட்ட போராட்டம் என்று கூறிய செம்பியன், இதற்காக மாநிலம் தழுவிய அளவில் பரப்புரை செய்யப்போவதாக கூறினார்.
அதேபோல், ஐநா மன்றத்தீர்மானத்தில் இலங்கைக்கான சர்வதேச விசாரணை தேவை என்கிற தமிழக மாணவர்களின் கோரிக்கையை உள்வாங்காத அமெரிக்க அரசின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் அவர் கூறினார்.

கருணா தகவல் தந்திராவிடில் யுத்தத்தில் வென்றிருக்க முடியாது!- அமைச்சர் ராஜித

கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசில் இணைந்திராவிடில் யுத்தத்தில் வெற்றி பெற்றிருக்க முடியாது என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள மாடிக்கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரதிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் தொடர்ந்து கூறியதாவது:
ஆனையிறவு சமரில் விடுதலைப்புலிகளின் வெற்றியை கருணாவே ஈட்டிக் கொடுத்தார். இதுபோன்று புலிகளின் பல வெற்றிகளுக்கு அவர் காரணமாக அமைந்தார்.
இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்ட போது கருணா ஹெலிகொப்டரில் அங்கு சென்று பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காட்டினார்.
டி.பி.விஜயதுங்க ஜனாதிபதியாக இருந்து போதும், 1994ம் ஆண்டிலும் கிழக்கை படையினரால் மீட்கப்பட்டிருந்த போதிலும், புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தொப்பிகல பிரதேசம் படையினரால் மீட்கப்படவில்லை.
அங்கு படையினரால் நுழைய முடியவில்லை.
ஆனால் கருணா அந்த அமைப்பில் இருந்து விலகிய பின்னர் அவர் வழங்கிய தகவலின் மூலமே தொப்பிகலவை படையினரால் மீட்க முடிந்தது.
யுத்தத்தில் அரசாங்கத்துக்கு எதிராக போரிட்ட கருணா நாடாளுமன்றத்தில் இருக்கிறார். ஆனால் யுத்தத்தை வெற்றிகொண்ட சரத் பொன்சேகா சிறையில் இருக்கிறார் என்று நாடாளுமன்றில் எதிர்க்கட்சியினர் குரலெழுப்பினர்.
கருணா அரசுடன் இணைந்து தகவல் தந்திருக்காவிட்டால் இவ்வளவு விரைவாக யுத்தத்தை முடித்திருக்க முடியாது என்று அவர்களுக்கு நான் பதிலளித்தேன்.
கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்துவிட்டதாகவும் அவரை கொழும்புக்கு அழைத்து வந்திருப்பதாகவும், அவரை உங்கள் வீட்டுக்கு அழைத்து வருவதாகவும் இங்கு சமுகமளித்துள்ள அலிசாஹிர் மௌலானா எனக்கு தொலைபேசியில் கூறியிருந்தார்.
அவ்வாறு கருணாவை எமது வீட்டுக்கு அழைத்து வரவேண்டாம் என்றும், அழைத்துவந்தால் நான் கொழும்பில் இருக்க முடியாது என்றும் கூறிய நான் நீங்களும் கவனமாக இருங்கள் என்று மௌலானாவுக்கு சொன்னேன்.
ஆனால் கருணா நாடாளுமன்றத்துக்கு வந்தார். அலிசாஹிர் மௌலானா அமெரிக்காவுக்கு ஓடினார்.
நான் பின்னர் ஒருமுறை அமெரிக்கா சென்றபோது மௌலானாவை சந்தித்து மேற்படி உரையாடிய சம்பவத்தை ஞாபகப்படுத்தினேன். என்றார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.

அரசியலில் குள்ளத்தனமாக சிந்திக்கும் நான்கு பிரபலங்கள்

Manmogan_1
இந்திய அரசியலில் குள்ளத்தனமான இராஜதந்திரத்தை பயன்படுத்துவதில் நான்கு பேர் பிரபல்யம் பெற்று விளங்குகிறார்கள். அவர்களில் முதன்மை இடத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பெற்றுள்ளார்.அவருக்கு அடுத்த படியாக குள்ளத்தனமாக காய்நகர்த்தல்களை மேற்கொள்வ தில் முன்னிலை வகிப்பவர் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி இர ண்டாவது இடத்தையும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நீருக்கு அடியில் நெருப்பை அணையாமல் கொண்டு செல்லக்கூடியவர். இவர் மூன்றாவது இடத்தையும் எப்போதும் அமைதியாக வார்த்தைகளை அளந்து பேசினாலும் கண்சிமிட்டாமல் தான் செய்ய நினைத்ததை எவருக்கும் அச்சமின்றி செய்யும் பிரதமர் மன்மோகன்சிங் நான்காவது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

குழி வெட்டும்போது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பணிச்சங்கேணி பகுதியில் மனித எச்சங்கள் கொண்ட புதைக்குழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
பணிச்சங்கேணி, எல்லத்தீவு பகுதியில் இன்று சனிக்கிழமை காலை ஹோட்டல் ஒன்று நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நடுவதற்காக குழி வெட்டும்போதே இந்த புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழி வெட்டும்போது மனித எலும்புக்கூடுகள் தென்படுவதைத் தொடர்ந்து அது தொடர்பில் வாகரை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு சென்றுள்ள வாகரை பொலிஸார் குறித்த பகுதியில் இடம்பெற்றுவரும் வேலைகளை நிறுத்தியுள்ளதுடன் குறித்த பகுதிக்கு பாதுகாப்பும் வழங்கியுள்ளனர்.
மனித புதைகுழி தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சீமானும், சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினரும் செய்யும் தமிழ் இனவாத அரசியல் இலங்கைத் தமிழருக்கு எதிரானதும், ஆபத்தானதும்

வந்தாரை வாழ வைக்கும் என்று சொல்லப்படும் தமிழகத்திற்கு பயணம் வந்த ஒரு மனிதன் தாக்கப்படுகின்றான். வெறிநாயை அடிப்பது போல ஒரு மனிதனை,வேறு நாட்டிற்கு வந்தவனை, ஆதரவற்றவனை, துரத்தி துரத்தி அடிப்பதை என்னவென்று சொல்வது. காட்டுமிராண்டித்தனம், கோழைத்தனம், தெருச்சண்டித்தனம், மனிதத்தை காலில் போட்டு மிதிக்கும் கொடூரம். எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாதது. இதை இலங்கைத்தமிழ் மக்களிற்காக, இனப்படுகொலையின் போது மரணித்தவர்களிற்காக செய்கிறோம் என்பது இறந்தவர்களை அவமதிக்கும் செயல். இருப்பவர்களை இன்னொரு அழிவிற்கு தள்ளிவிடும் செயல்.
சீமானும், சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினரும் செய்யும் தமிழ் இனவாத அரசியல் இலங்கைத் தமிழருக்கு எதிரானதும், ஆபத்தானதும் ஆகும். மிகவும் மெலிதாக முளை விட்டு எழும் தமிழ்-சிங்கள ஒற்றுமையை வேரோடு அழிக்கும் அரசியல் இது. தமிழ் குறுந்தேசிய அரசியலை தூக்கிப்பிடித்து, இலங்கையின் மற்றைய தேசிய இனங்களுடன் பகமை கொண்டு இலங்கைத்தமிழரது வாழ்வையும்,வளத்தையும் சிங்களபேரினவாதிகளிடம் பலி கொடுத்த தமிழீழ இயக்கங்களின் வலதுசாரி அரசியலை ஒத்தது இது. வெறியோடு காத்திருக்கும் சிங்கள பேரினவாத சக்திகளிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு விடுத்து மறுபடி ஒரு இனக்கலவரத்தையோ, இனப்படுகொலையையோ தமிழ்மக்கள் மீது கட்டவித்து விடுவதற்கான சந்தர்ப்பங்களை கொடுக்கக் கூடிய முட்டாள்தனமான அரசியல் இது.
இலங்கைத்தமிழ் அகதிகளை குற்றவாளிகளைப் போல சிறப்புமுகாம்களில் அடைத்த எம்.ஜி.ஆர் தலைவன், போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்ற ஜெயலலிதா ஈழத்தாய், இனப்படுகொலை செய்த மத்திய அரசுடன் பதவி சுகம் கண்ட கருணாநிதி தமிழினத்தலைவர். இவர்களை மாறி, மாறி ஆதரித்துக் கொண்டு இந்த கள்ளர்கள் ஈழமக்களிற்கு தீர்வை பெற்று தருவார்கள் என்று மக்களை நம்ப வைத்து கொண்டிருக்கும் இந்த தமிழினவெறியர்கள் அப்பாவிமக்களிடம் தங்களது வீரத்தை காட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டு தமிழர்களிற்கும், இலங்கை தமிழர்களிற்கும் எதிராக பேசும், செயற்படும் இளங்கோவன், இந்து ராம், சுப்பிரமணியசாமி, சோ ராமசாமி, அழித்தவளை அன்னை என்று சேலைக்குள் பதுங்கும் காங்கிசுக்கயவர்கள் எல்லாம் சுதந்திரமாக திரிகையில் இந்த அப்பாவிகளை அடிக்கிறீர்களே வெட்கமாயில்லை.

இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை!


america-spokஇலங்கைக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை எடுக்க நேரிடலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தத் தவறினால் சர்வதேச ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலாண்ட் தெரிவித்துள்ளார்.சர்வதேச சமூகத்தின் ஆலோசனைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்hளர்.
புதிதாக நிறைவேற்றப்பட்ட தீமானத்தை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சொந்த நாட்டின் மக்களுக்கு உரிய முறைமையில் தமது கடமைகளை ஆற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானமானது இலங்கையின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவையே வெளிப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான தீர்மானமொன்றை நிறைவேற்ற நேரிடும் என இலங்கையை ஏற்கனவே அமெரிக்கா எச்சரித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.