தமிழத்திற்கு வந்து விளையாடுவதை நாம் தடுக்க முடியாது;சுப்பிரமணியம் சாமி.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள், தமிழத்திற்கு வந்து விளையாடுவதை நாம்
தடுக்க முடியாது. உடனடியாக தமிழக அரசை விலக்க வேண்டும். சென்னையை
பதற்றப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார் ஜனதா கட்சித் தலைவர்
சுப்பிரமணியம் சாமி.
குறிப்பாக இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு
எதிரான முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சென்னை சேப்பாக்கம்
மைதானத்தை சிறப்பு ஆயுதப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து
போட்டிகளை நடத்தி இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டும்.
அப்படி
இல்லை என்றால் சென்னையை பதற்றப் பகுதியாக அறிவிக்க வேண்டும். மேலும்
அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி ஜெயலலிதா அரசை ஜனாதிபதி
விலக்கலாம் என சாமி. அறிவித்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire