20 02 2012
பல உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளையும், கிளஸ்டர் குண்டுகளையும் இலங்கை பாவித்துள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் சில இடங்களில் புலிகளின் அகோரத் தாக்குதலைச் சமாளிக்க முடியாத இராணுவத்தினர் அப் பகுதிகள் நோக்கி பாரிய கனரகத் தாக்குதலை நடத்தியதோடு, நச்சு வாயுத் தாக்குதல் மற்றும் பொஸ்பரஸ் குண்டுத்தாக்குதல் போன்றவற்றையும் நடத்தியுள்ளனர்.
தாமாகவே சில இடங்களை பாதுகாப்பு வலயம் என அறிவித்துவிட்டு, அவ்விடங்களில் மக்கள் செறிவாக இருந்தவேளை பல தாக்குதலையும் நடத்தியுள்ளனர். இவை அனைத்துமே இன அழிப்பு மற்றும் போற்குற்றங்கள் ஆகும். இதனை மூடி மறைக்கவே இலங்கை அரசானது இதுவரை எவரையும் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அனுமதிப்பது இல்லை. இதேவேளை தடைசெய்யப்பட்ட குண்டுகள் பாவிக்கப்பட்ட இடங்களை இலங்கை அரசானது தற்போது துப்படவுசெய்து வருகிறது. மற்றும் எச்சங்களை அகற்றியும் வருவதை தமிழ் மக்கள் அறிந்ததே
ஓங்கி ஒலிக்கும் எம் ஒவ்வொரு குரலும் சீறிலங்கா அரசை குறறவாளி கூண்டில் நிறுத்தும்!
Aucun commentaire:
Enregistrer un commentaire