vendredi 8 mars 2013

அமெரிக்க சிறப்பு விமானத்தை தரையிறக்க தீர்மானம் மத்தள விமானநிலைய திறப்பு விழாவன்று


அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தின் திறப்பு விழாவன்று அமெரிக்காவில் இருந்து புறப்படும் சிறப்பு விமானம் ஒன்றை அங்கு தரையிறக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை இத்திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக லொஸ் ஏஞ்சல்ஸ், ஹொஸ்டன், நியூயோர்க் மற்றும் வொசிங்டன் பகுதிகளிருந்து பார்வையாளர்கள் வருதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை மத்தள விமான நிலையம் இம்மாதம் 18 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
மிகப்பெரிய விமானங்கள் இறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மத்தள விமான நிலையத்தின் திறப்பு விழாவன்று சிறப்பு விமானம் ஒன்றில் வந்து தரையிறங்கவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மத்தள விமான நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார்.
இதேவேளை எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானம், லொஸ் ஏஞ்சல்சில் இருந்து புறப்பட்டு ஹொஸ்டன், நியூயோர்க், வொசிங்டன், டுபாய் வழியாக, மத்தள விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.
எதிர்வரும் 16ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்சில் இருந்து புறப்படும் இந்த விமானம், 17ஆம் திகதி டுபாயை அடைந்து, 18ஆம் திகதி மத்தளவில் தரையிறங்கும்.
பின்னர், இந்த விமானத்தில் இலங்கைக்கு வரும் பயணிகளை மத்தள விமானநிலையத்திலிருந்து சொகுசு பஸ்கள் மூலம் கொழும்புக்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Aucun commentaire:

Enregistrer un commentaire