எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச்.25,2013) முதல் இந்த கல்லூரிகளை மீண்டும் திறக்க மாநில அரசு முயற்சிகளை முன்னெடுத்துவருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் பின்னணியில், தமிழக மாணவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று போராடும் மாணவர்களுக்கான அமைப்பாக உருவாகியிருக்கும் அமைப்புக்களில் ஒன்றான தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த லயோலா கல்லூரி மாணவர் ஷண்முகப்பிரியன் என்கிற செம்பியன் அளித்த செவ்வியில் விளக்கினார்.
போராடும் தமிழக மாணவர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் புறக்கணித்த இந்திய நடுவணரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் வரியை தடுப்பதே தங்களின் அடுத்த கட்ட போராட்டம் என்று கூறிய செம்பியன், இதற்காக மாநிலம் தழுவிய அளவில் பரப்புரை செய்யப்போவதாக கூறினார்.
அதேபோல், ஐநா மன்றத்தீர்மானத்தில் இலங்கைக்கான சர்வதேச விசாரணை தேவை என்கிற தமிழக மாணவர்களின் கோரிக்கையை உள்வாங்காத அமெரிக்க அரசின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் அவர் கூறினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire