சர்வதேச குற்றச்சாட்டுகள்
குறித்து உள்ளக விசாரணைகளையே இலங்கை மேற்கொள்ளும். எந்தவொரு
சந்தர்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு இலங்கையில் இடமில்லை என அரசாங்கம்
திட்டவட்டமாக தெரிவித்துள்ளதுடன் அமெரிக்காவின் தீர்மானங்கள் எவ்வகையானதாக
அமைந்தாலும் அது இலங்கைக்கு சவாலாக அமையாது என்றும் தெரிவித்துள்ளது. இன்று
வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டின்
போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய
கேள்வியொன்றுக்கு ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய
ரம்புக்வெல பதிலளிக்கையில், எவ்வறாயினும் ஜெனீவாவில் அமெரிக்காவினால்
நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து எமக்கு கவலையில்லை. அதனட
தீர்மானங்கள் இலங்கையை ஒருபோதும் சவாலுக்கு உட்படுத்தாது என்றார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire