அன்பான பிரான்ஸ் வாழ் இலங்கையர்களே
இலங்கைத் தூதரகத்துடனான தங்களது உத்தியோகபூர்வ தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பலர் சிரமங்களை எதிர்நோக்குவதாக எமக்கு அறியக்கிடைத்துள்ளது.
கடவுச்சீட்டு, பிறப்புப் பதிவுகள், அத்தாட்சிப்படுத்தல்கள் போன்ற உத்தியோகபூர்வ தேவைகளின் நிமித்தம் இலங்கைத் தூதரகத்தை நாடும்போது உரிய ஆவணங்கள் கையளித்தல் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் நேர, கால, பண விரயங்கள் எடுக்கப்படுவதை நாம் கருத்திலெடுத்துள்ளோம்.
இலங்கைத் தூதரகத்தில் தாங்கள் பெற்றுக்கொள்ளவேண்டிய பணிகளின் நிமித்தம் நீங்கள் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாக உரிய அதிகாரி ஒருவருடன் கலந்துரையாடும் நோக்கத்துடன் எதிர்வரும் 22.03.2012 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு இலங்கைத் தூதரகத்தில் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு உங்களது பிரச்னைகளை விளக்கும் பட்சத்தில் காலக்கிரமத்தில் அவற்றுக்கான தீர்வு நடவடிக்கைளை விரைவுபடுத்தி சிறந்த தொடர்பாடல்களை மேற்கொள்ளலாம் என்பதையும் அறியத்தருகின்றோம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire