மிஸ் தமிழ் சுவிற்சர்லாந்து எனப்பெயராம் (அதாவது சுவிற்சர்லாந்து தமிழ்
அழகுராணி எனலாம்) இந்த அழகுராணிப்போட்டியில் பங்குபற்றுபவர்களின் தாய்
அல்லது தந்தை இலங்கையராவும் தமிழராகவும் இருக்க
வேண்டுமாம். தமிழ் மொழியை சரளமாக பேசக்கூடியவராகவும் இருக்க வேண்டுமாம்.
வயது 16-25 வரையாம். இறுதி தெரிவு 27 ஏப்ரலில் இடம்பெறவுள்ளதாம்.
தமிழர் கலாச்சாரத்திற்கு புதியதான இக்கைங்கரியத்தினை முன்னெடுக்கின்ற அமைப்பின் நடாத்துனரான சிறிதரன் என்பவர் 20 மினுட்டன் பத்திரிகைக்கு தெரிவிக்கையில் „எங்களுடைய கலாச்சாரத்தில் பெண்களுக்கு இவ்வாறானதோர் சந்தர்ப்பம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அவர்களை வெளி உலகிற்கு கொண்டு வருவதற்காக நாங்கள் அவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் இந்த வாய்ப்பினை வழங்குகின்றோம்' எனக் கூறியுள்ளார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire