்
இலங்கைக்கு
எதிரான போராட்டம் வலுத்து வருவதன் காரணமாக சென்னையில் நடைபெறும் ஐபிஎல்
போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருக்கு விளையாடும் சுழற்பந்து மேதை முத்தையா
முரளிதரன் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளார். "இது கிரிக்கெட்டிற்கு வருத்தமான
நாள். இது அரசின் முடிவு, அரசே எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க
முடியவில்லையெனில் நாங்கள் எச்சரிக்கையுடன் இருப்பதே நல்லது" என்று
கூறியுள்ளார் முரளிதரன். ராயல் சாலஞ்சர்ஸ் அணி நிர்வாகத்திடம்
பேசியுள்ளேன், சென்னையில் அல்லாத போட்டிகளில் நான் பங்கேற்க முடியும்.
என்று தனியார் தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ளார் முரளிதரன். "நான் 20
ஆண்டுகளாக இலங்கை அணிக்காக விளையாடியுள்ளேன், ஒரு தமிழனாக அங்கு எந்த வித
பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. நான் பல பிரச்சனைகளை சந்தித்தபோது இலங்கை
அரசும், கிரிக்கெட் வாரியமும் எனக்கு ஆதரவாகவே செயல்பட்டது. முன்பு
போர்ச்சூழல் இருந்தது ஆனால் இப்போது இலஙைத் தமிழர்கள் அமைதியாகவே
வாழ்கின்றனர். எனவே இந்திய அதிகாரிகள் இலங்கையில் நாங்கள் எப்படி
வாழ்கிறோம் என்பதை வந்து பார்க்கவேண்டும். கடந்த காலத்தில் நடந்ததை
மறக்கவேண்டும். இப்போது இன்னொரு போர்ச்சூழலை நாங்கள் விரும்பவில்லை. எங்களை
அனுமதித்தால் நாங்கள் சென்னையில் விளையாடுவோம், சென்னை எனக்கு இரண்டாவது
வீடு. என் மனைவி சென்னையைச் சேர்ந்தவர். இது எனக்கு உணர்வுபூர்வமான தருணம்.
நாங்கள் அரசியலில் ஈடுபடவிரும்பவில்லை. ரசிகர்களுக்காக நாங்கள் கிரிக்கெட்
ஆடுகிறோம். இவ்வாறு கூறினார் முத்தையா முரளிதரன். இவர் 5 ஐ.பி.எல்.
சீசன்களிலும் விளையாடியுள்ளார். 2008 - 10 -இல் சென்னை சூப்பர் கிங்ஸ்
அணிக்கு விளையாடினார். பிறகு 2011-இல் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு
விளையாடினார். 2012ஆம் ஆண்டு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு
விளையாடினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire