mardi 5 mars 2013

அதிருப்தி: ஆட்சேபம்: புலிகள் சார்பு மாநாட்டை நடத்த அனுமதித்தமைக்கு கடும் எதிர்ப்பு

எல். ரீ. ரீ. ஈ. சார்பு அமைப்பான உலகத் தமிழர் அமைப்பின் ஆண்டு விழாவினை பிரிட்டிஷ் பாராளுமன்றத் தில் நடத்த அந்நாட்டு அரசாங்கம் அனுமதித்தமைக்கு இலங்கை அரசு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

பிரிட்டனில் எல். ரீ. ரீ. ஈ. இன்னமும் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பா கவே இருந்து வருகிறது. இந்நிலை யில் இவ்வாறான ஒரு அமைப்பிற்கு சார்பாக குரல் கொடுத்து வரும் உலகத் தமிழர் அமைப்பின் ஆண்டு விழாவிற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்துள்ளமை தவறு எனவும் இல ங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இம்மாநாட்டினை பிரிட்டிஷ் பாரா ளுமன்றத்தில் நடத்த இடமளித்தமை மற்றும் அந்நாட்டின் அரசாங்கப் பிரதிநிதிகள் அதில் கலந்துகொண்டமை தவறான செயலெனவும் இலங்கை அரசு பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இவ் விடயம் தொடர்பிலான முழுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளது.

உலகத் தமிழர் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் கிரிஸ் நோனிஸ் தலை மையில் பல்வேறு வழிகளில் எதிர்ப்புகள் வெளிக்காட்டப்பட்டன. இந்நிலையில், நடைபெற்று முடிந்த மாநாட்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டமைக்கு இலங்கை அரசின் முழுமையான எதிர்ப் பினை பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சுக்கு எழுத்து மூலமாகவும் வாய் மொழி மூலமாகவும் தெரியப்படுத்தி யுள்ளதென இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பு தடை செய்யப் பட்டுள்ள நிலையில் உலகத் தமிழர் அமைப்பு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆண்டு விழா கொண்டாட அந்நாட்டு அரசாங்கம் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சிடம் இலங்கை அரசு சார்பில் அங்குள்ள உயர்ஸ்தானி கராலயம் கடும் ஆட்சேபத்தினை வெளிக்காட்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டையும் நாட்டு மக்களையும் பிரிக்க முயலும் மேற்படி அமைப்புக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை தவறு எனவும் இதன்போது தெளிவுபடுத் தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் நோர்வேயின் சமாதா னத்துக்கான முன்னாள் விசேட தூதுவர் எரிக் சொல்ஹேய்ம், பிரிட்டிஷ் எதிர்க் கட்சித் தலைவர், பிரிட்டனின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் டேவிட் மிலிபேன், பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருப்ப தாகவும் தெரியவருகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire