vendredi 22 mars 2013

இலங்கைக்கு ஆதரவாக பேசிய மம்தா :


இலங்கைக்கு ஆதரவாக பேசிய மம்தா : அரவிந்தர் ஆசிரமம் மீது தாக்குதல்
இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு இந்தியாவின் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதனையடுத்து, புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் மீது தமிழ் அமைப்புகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை நட்பு நாடு என்பதால், அந்தநாட்டு எதிராக தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ் அமைப்பினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆகியோர் அரவிந்தர் ஆசிரமம் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திடீரென அவர்கள் ஆசிரமத்துக்குள் புகுந்து அங்கிருந்த பூத் தொட்டிகளை அடித்து நொறுக்கினர். மேலும அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த கண்ணாடி ஜன்னல்கள், அலுவலக பொருட்களை அடித்து உடைத்து சூறையாடியதாகவும் தமழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஆசிரமத்தையும் கல்வீசியும் தாக்கியுள்ளனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை பொலிசார் கைது செய்தனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire