மியான்மரில் முஸ்லிம் மற்றும்
புத்த மதத்தினர்களுக்கு இடையே மூண்டுள்ள கலவரம் காரணமாக, மெய்க்திலா நகரில்
அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு அதிபர் தெய்ன் சீன் அரசு
தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் இதற்கான அறிவிப்பை
வெளியிட்டார். மெய்க்திலா பகுதியில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும்
புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே புதன்கிழமை மோதல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாக
உள்ளன. வன்முறைக்கு இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 50 ஆண்டுகளாக
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மியான்மரை ஜனநாயகப் பாதைக்கு
திருப்பும் முயற்சியில் அதிபர் ஈடுபட்டுள்ளார். இந்த முயற்சிக்கு
முட்டுக்கட்டை போடும் வகையில் அங்கு வன்முறை வெடித்துள்ளதால், அதைக்
கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire