vendredi 29 mars 2013

1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 400 தொடக்கம் 600 பொலிஸார் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் கருணாவிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் - பிரட் அடம்ஸ்


இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள் கருணா அம்மான் என அழைக்கப்பட்டும் விநாயகமூர்த்தி முரளிதரனிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது யுத்த குற்ற விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் புலிகள் இயக்க அமைப்பினருடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருத்து வெளியிட்டிருந்தார்.
இது குறித்து இன்று (28) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய நாடுகளுக்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ், கருணாவின் கருத்தை வைத்துக் கொண்டு அவரை சுதந்திரமாக செயற்பட விட முடியாது என தெரிவித்துள்ளார்.
கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த போது, பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட ஒருவர் என்பதனால் இலங்கை அரசின் போர்க் குற்ற விசாரணை அவரிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என பிரட் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 400 தொடக்கம் 600 பொலிஸார் விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் சரணடைந்ததாகவும், அவர்களில் பலர் கருணாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த போது சித்திரவதை செய்யப்பட்டதாகவும் சிங்கள முஸ்லிம் பொலிஸர் கொலை செய்யப்பட்டதாகவும் மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
எனினும் பீபீசிக்கு பேட்டியளித்துள்ள கருணா, அந்த சம்பவங்களோடு தன்னை தொடர்பு படுத்தாமல் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் பிரட் அடம்ஸ் சுட்டிக் காட்டினார்.
1990ஆம் ஆண்டு 75 முஸ்லிம்கள் படுகொலை மற்றும் மட்டக்களப்பில் 200 பொதுமக்கள் படுகொலை என்பவற்றுடன் கருணா குழுவினர் தொடர்பு இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் சிறுவர்களை படையில் இணைத்துக் கொண்டதாக 2004ஆம் ஆண்டு மனித உரிமைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வீடு வீடாகச் சென்று சிறுவர்களை படையில் சேர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டமைக்கு கருணா முக்கிய பங்கு இருப்பதாகவும் இன்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் வடக்கு, கிழக்கில் குடும்பங்களை அச்சுறுத்தி, பாடசாலை செல்லும் சிறுவர்களை கடத்தியதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய பின்னரும் இலங்கை அரச படைகளுடன் இணைந்து குற்றச் செயல்களில் செயற்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்ட கருணா, இப்போது அரச வரப்பிரசாதங்களை அனுபவித்து வருவதாக பிரட் அடம்ஸ் குறிப்பிட்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire